சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை! ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்! 

0
323
#image_title
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை! ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
கேரளா மாநிலத்தில் சபரி மலையில் மிகவும் பிரசக்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு நேற்று(டிசம்பர்27) மண்டல பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஐயப்பனை ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு அவர்கள் ஐயப்பனுக்கு 453 பவுன் தங்க அங்கியை அணிவித்தார். அதன் பின்னர் களபாபிஷேகம், கலசாபிஷேகம் முதலிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த மண்டல பூஜையில் நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் கேரள மாநிலம் தேவசம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் அவர்களும், திருவிதாங்கூர் தேவசம் வாரியத் தலைவர் பி.எஸ் பிரசாந்த் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்ட நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் அவர்கள் சபரிமலை கோயில் சந்நிதானத்திலும், சபரிமலைக்கு செல்லும் வழியிலும் மாநில அரசு செய்திருந்த ஏற்பாடுகள் குறித்து பாராட்டுகள் தெரிவித்தார்.
நேற்று(டிசம்பர்27) நடைபெற்ற மண்டல பூஜையில் கலந்து கொண்ட கேரள மாநில தேவசம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் “சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்படும்” என்று கூறினார்.
நேற்று(டிசம்பர்27) மண்டல பூஜை முடிவடைந்ததை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மூடப்பட்டது. பின்னர் வரும் டிசம்பர் 30ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை வரும் 2024ம் வருடம் ஜனவரி மாதம் 15ம் தேதி நடைபெறவுள்ளது.
நேற்று(டிசம்பர்27) கோயில் நடை மூடப்பட்டதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் பக்தர்கள் தரிசனம், காணிக்கை முதலிய விவரங்களையும் கூறியுள்ளது. அதன்படி கடந்த டிசம்பர் 25ம் தேதி வரையில் 31,43,163 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள் அளித்த காணிக்கை மற்றும் விற்பனை செய்யப்பட்ட பிரசாதங்கள் மூலமாக 241.71 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 18.72 கோடி ரூபாய் அதிகம் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Previous articleகேப்டன் விஜயகாந்த காலமானார்..!! பேரதிர்ச்சியில் தொண்டர்கள்!
Next articleஅதற்கு மறுத்த சில்க் ஸ்மிதா.. திமிர் பிடித்த பெண் என்று சொன்ன சிவாஜி..? என்ன நடந்தது அன்று!