கண்ணதாசனுக்கும் காமரசருக்கும் சண்டை! சமாதானப்படுத்த எழுதிய பாடல் தான் இது!

0
260
#image_title

கண்ணதாசனும் காமராஜரும் இரண்டு பேரும் காங்கிரஸில் இருந்தனர். அப்பொழுது இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் பொழுது மன்னிப்பு கேட்கும் விதமாக இந்த பாடலை கண்ணதாசன் எழுதியதாக ஒரு வரலாறு உண்டு.

 

கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவர் எத்தனையோ ஆயிரங்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார். அந்த அனைத்து பாடல்களும் தேன் சுவை சொட்ட சொட்ட நம்மை நனைய வைத்திருக்கிறது என்பது மிகையாகாது.

 

மதுப்பழக்கம் போதைப்பழக்கம் இருந்தாலுமே, அந்த சமயம் கூட கவிதை நடையில் பேசுவாராம் அவ்வளவு திறமை வாய்ந்தவர் கண்ணதாசன்.

 

காமராஜர் என்பவர் மறு பிறவி எடுக்க மாட்டாரா? என்று அனைத்து மக்களும் ஏங்கும் அந்த தலைவர் இந்த நாட்டை விட்டுச் சென்றார். காமராஜர் ஆட்சி செய்த காலம் பொற்காலம் என்று இன்றைக்கும் மக்கள் பேசுகின்றனர் என்றால் அது மிகை ஆகாது.

 

ஏன் இவரை மக்கள் செல்வம் , ஏழைப் பங்காளன் என அழைக்கிறார்கள் என்றால் , அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ” எம்ஜிஆருக்கு அனைத்து தலைவர்களையும் அனைத்து கலைஞர்களையும் வீட்டில் வரவழைத்து விருந்து வைப்பது என்பது வழக்கம். அப்படி காமராஜரை பல நாட்களாக விருந்துக்கு வர வேண்டும் என்று அழைத்திருக்கிறார்.

 

காமராசரோ சொல்கிறேன் எம் ஜி ஆர் சொல்கிறேனப்பா என்று சொல்லி அதில் இருந்து விடுபட்டுள்ளார்.

 

ஒரு கூட்டத்தின் போது இருவரும் சந்தித்துக் கொள்ளும் பொழுது, இன்றைக்கு கண்டிப்பாக நீங்கள் விருந்துக்கு வர வேண்டும் என்று கண்டிப்பாக சொல்கிறார் எம்ஜிஆர்.

 

அதற்கு காமராசர் அவர்கள் சொல்கிறார், ” உன் வீட்டு விருந்தை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் அனைத்து அசைவ உணவுகளும் இருக்குமாம், நானோ ஏழை பங்காளன் இரண்டு இட்லி கொஞ்சம் தயிர் சாதம் இருந்தால் போதும். உன்னுடைய வீட்டிற்கு வந்து அந்த விருந்தை நான் சாப்பிட்டால், நான் அதற்கு அடிமையாகி விட்டால் மறுபடியும் சாப்பிட தூண்டும். அதனால் எனக்கு இந்த விருந்து வேண்டாம் என்று தான் எதிர்த்தேன் என்று சொன்னாராம்.

இதனால்தான் அவரை நாம் ஏழை பங்காளன் மக்கள் செல்வன் என அழைக்கிறோம்.

 

இப்படி கண்ணதாசனும் காமராஜரும் சிறந்த நண்பர்கள். அப்படி அரசியலின் போது ஏதோ இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது “பட்டணத்தில் பூதம்” படத்தில் கே ஆர் விஜயா ஜெய்சங்கர் நாகேஷ் ஆகியோர் நடித்திருப்பார்கள்.

 

இதில் அமைந்த பாடலான “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” என்ற ஒரு பாடல் கே ஆர் விஜயா டி எம் சௌந்தரராஜன் பாடுவது போல் ஒரு பாடல் அமைந்திருக்கும்.

 

இந்த பாடல் மக்கள் செல்வரின் தாயார் பெயர் சிவகாமி. இந்தப் பாடல் கண்ணதாசன் காமராசருக்கு தூது செல்ல எழுதியது என்று ஒரு வரலாறு உண்டு.

 

Previous articleஎம்.ஜி.ஆர் vs சிவாஜி: அதிக வெள்ளி விழா படங்கள் கொடுத்தது யார்?
Next articleஒரே நாளில் போட்டி போட்டு மோதிக்கொண்ட அஜித் – விஜய்..!!