சந்திரபாபுவின் “மாடி வீட்டு ஏழை” படத்தில் எம்ஜிஆர் ஏன் நடிக்கவில்லை?

0
220
#image_title

சந்திரபாபு அவர்களின் அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த காலத்தில் ஒரு காமெடியன் என்றால் இவரைத்தான் புக் செய்வார்கள். அந்த காலத்திலேயே ஒரு காமெடியனுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் அது இவருக்காக தான் இருக்கும்.

 

அந்த அளவுக்கு எம்ஜிஆர் சிவாஜி அதற்கு அடுத்தது சந்திரபாபு படத்தில் இருக்க வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவரே பாடியும், அவரே நடித்தும், அவரே ஆடியும் படத்தில் நடித்ததால் மக்களுக்கு மிகவும் அவரை பிடித்து விட்டது. அந்த காலத்தில் சந்திரபாபு அவர்களுக்கு மிகவும் நல்ல மௌஸ் இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

பாபுவிற்கு ஒரு எண்ணம் இருந்தது. தான் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும். அதில் எம்ஜிஆர் நடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார். அப்படி மாடி வீட்டு ஏழை என்ற பணம் அவருக்காக தயாராகிறது. அதற்கு எம்ஜிஆர் ஒப்புக்கொள்கிறார்.

 

எம்ஜிஆர் தனது அண்ணனாகிய சக்கரபாணி அவர்களிடம் தேதிகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சந்திரபாபு விடம் சொல்லுகிறார். தேதிகள் குறிக்கப்படுகின்றன. ஆனால் எம்ஜிஆர் அந்த படத்திற்கு சூட்டிங் இருக்கு வரவில்லை.

 

தேதியை கேட்டுதானே படப்பிடிப்புக்கு ஆரம்பிக்கப்பட்டது வரவில்லை என்றால் என்ன செய்வது என்று நேரடியாக எம்ஜிஆரை பார்க்க புறப்படுகிறார். அப்பொழுது எம்ஜிஆரின் அண்ணன் ஆன சக்கரபாணி அவர்களை பார்த்து பேசுகிறார் சந்திரபாபு.

 

அப்பொழுது சக்கரபாணி சொல்லுகிறார் எம்ஜிஆருக்கு இதில் நடிக்க விருப்பமில்லை அதனால் தான் படபிடிப்பிற்கு வரவில்லை என்று, சொல்லும்போது சந்திரபாபுவுக்கு மிகவும் கோபம் வந்து விடுகிறது. அதனால் எம்ஜிஆரின் அண்ணனான சக்கரபாணி அவர்களை அடித்து விடுகிறார்.

 

இந்த சண்டைக்கு பிறகு மறுபடியும் எம்ஜிஆர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் படப்பிடிப்பு நின்று விடுகிறது. அதற்கு ஒரு புறம் சற்று காரணங்களும் சொல்லப்படுகிறது.

 

மாடி வீட்டு ஏழை படத்தின் தயாரிப்பாளரின் மனைவியுடன் தகாத உறவு இருந்ததாகவும் அதனால்தான் எம்ஜிஆர் நடிக்க வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அந்த பெண்ணிற்கு எந்த ஒரு பங்கமும் வரக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

எம்ஜிஆர் அவர்களை ராமச்சந்திரா என்ற பெயர் வைத்து அழைக்கக்கூடிய ஒரே ஒரு நபர் ,அது சந்திரபாபு தான். ஒரு கட்டத்தில் அதுவே எம்ஜிஆர் அவர்களுக்கு அவமானமாக போய்விட்டது. எந்த தயாரிப்பாளர்களும் என்னை அறிமுகப்படுத்திய பகவான்கள் கூட என்னை எப்படி கூப்பிட்டதில்லை. ஆனால்” நீ அப்படி கூப்பிடுகிறாய் ” என்று மிகவும் கோபத்துடன் எம்ஜிஆர் இதை செய்ததாக கூறப்படுகிறது.

 

எம்ஜிஆர் சந்திரபாபுவை பார்த்து” நீ வளர மாட்டாய் இனி நீ கீழே தான் என்று சொல்லினாராம்”. அதன் பிறகு இந்தப் படம் எடுக்க முடியாது என தயாரிப்பாளர்கள் பினான்சியர்கள் சந்திரபாபுவின் கழுத்தை நெரிக்க, தனது வீட்டு பத்திரத்தை கொடுத்துவிட்டு விஸ்வநாதன் அவர்கள் வீட்டில் தங்கி இருந்தாராம் சந்திரபாபு.

 

அதன் பின் தன் வாயால் தான் இந்த படம் நின்றது. எல்லாவற்றிற்கும் தான்தான் காரணம் என்று சந்திரபாபு உணர்ந்து கொண்டாராம்.