மசூதிகளில் ஒலி பெருக்கி பயன்படுத்த தடை – நீதிமன்றம் உத்தரவு

0
125

பொதுமக்களுக்குத் தொந்தரவாக அமைவதால் இனி மசூதிகளில் ஒலி பெருக்கிப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மசூதிகளில் அதிகாலையில் ஒலி பெருக்கி மூலம் பாங்கு ஓதுவதால் அது சுற்றுப்புறத்திலிருக்கும் மக்களின் தூக்கத்தைக் கெடுப்பதால் அதை தடை விதிக்க கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பாங்கு ஓதக்கூடாது. இது மற்றவர்களின் தூக்கத்தை பறித்து, தொந்தரவு செய்து உரிமைகளில் தலையிடுகிறது. பாங்கு ஓதுவது இஸ்லாத்தின் முறையாக இருந்தாலும், ஒலிபெருக்கிகள் மூலம் அழைக்க வேண்டும் என இஸ்லாம் சொல்லவில்லை. ஒருவருடைய செயல் மற்றவர்களின் மனித உரிமைகளை, அடிப்படை உரிமைகளை மீறக்கூடாது. . ஒலிபெருக்கிகள் இல்லாமல் பள்ளிவாசல்களின் கோபுரத்திலிருந்து முஅத்தின் இனி தொழுகைக்கு அழைக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு இஸ்லாமிய மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு புறம் இதை மேற்கோள் காடி மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்ற குரலும் ஒலிக்கிறது.

Previous articleதமிழக அரசு அறிவித்துள்ள புதிய அறிவிப்புகளும் தளர்வுகளும் என்னென்ன? விபரம் உள்ளே!
Next articleஅலைபேசி மூலம் கொரோனா பரவும் ஆபத்து – எச்சரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள்