80ஸ்களில் ஒரு நல்ல படத்தை கொடுக்க படாத பாடுபட்டிருக்கிறார் என்று சொன்னால் மிக ஆகாது. அவ்வளவு அற்புதமான படங்களை கொடுத்துள்ளார் ஆர் சுந்தர்ராஜன் அவர்கள். இப்பொழுது நாடகங்களில் நடித்து வருகிறார். அப்பா வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்பொழுது அவர் மிகப்பெரிய இயக்குனராக இருந்திருக்கிறார்.
நமக்கு இவர் ஒரு காமெடியனாக மட்டுமே தெரியுமே தவிர ஒரு இயக்குனர் என்று புதிய தலைமுறைக்கு தெரியாது. இப்படி காமெடிகளும் சரி, இயக்கத்திலும் சரி தனக்கு கொடுத்த பாத்திரத்தை சரியான விதத்தில் எடுத்துக்காட்டுவதில் ஆர் சுந்தர்ராஜன் வல்லவர் என்று சொல்லலாம்.
இவர் வைக்கும் குறி தப்பாது என்று சொல்லும் அளவிற்கு இவர் கனகஷ்யமாக காரியங்களை முடிப்பார்.
அப்படியே ரஜினிகாந்தை வைத்து இயக்கிய படம் தான் ராஜாதி ராஜா. இந்த படத்தை ஆர் சுந்தர்ராஜன் அவர்கள்தான் இயக்கினார். இவர் வேலை செய்யும் விதத்தை பார்த்த ரஜினிகாந்த்துக்கு ஏதோ இந்த படம் ஓடாது என்று நினைத்திருக்கிறார். ஆனால் ரஜினிக்கு அவரை பிடிக்கவில்லையாம்.
இளையராஜாவிடம் உங்க தம்பி கங்கை அமரனை இயக்க சொல்லுங்கள் எனக் கூறினார். ஆனால் நண்பர்களான ஆர்.சுந்தர்ராஜனுக்கு இளையராஜா வாக்கு கொடுத்தாராம். இந்த கதை நன்றாக இருக்கும். சுந்தர்ராஜன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
அப்படி நம்பிக்கையின் பெயரில் ஆர் சுந்தரராஜன் இயக்கத்தில் வெளியான ராஜாதி ராஜா படம் வெளிவந்து 175 நாள் தாண்டி ஓடி வெற்றி பெற்ற படம் என்றால் ரஜினி படங்களில் ராஜாதி ராஜா படமும் ஒன்று.