எம்ஜிஆர் அவர்கள் தயாரித்த உண்மை விட மாட்டேன் என்ற படம் நின்று போனதின் காரணம் என்னவாக இருக்கும்.
எம்ஜிஆர் மக்கள் திலகம் அவர்கள் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, அவர் எடுத்து நடிக்கும் காட்சிகள் இருந்தாலும் சரி,மக்களுக்கு எது நல்லதோ மக்களுக்கு நல்லதான கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் தான் அவரது படம் இருக்கும்.
இயக்குனர்கள் எந்த மாதிரியான கதையை கொண்டு வந்தாலும் அதை தனக்கென மாற்றி, மக்களுக்கு நல்லவிதமான கருத்துக்களை கூறும் வகையில் கதையையே மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தவர் தான் அவர்.
எம்ஜிஆர் ஒரு நடிகர் மட்டுமல்ல. நல்ல அரசியல்வாதி. அதே போல் ஒரு நல்ல இயக்குனர். எந்த கோணத்தில் கேமராவை வைக்க வேண்டும் என்பதை கூட எம் ஜி ஆர் தான் முடிவு செய்வாராம்.
இப்படி எம்ஜிஆர் தயாரிக்க வேண்டும் என நினைத்த படம் தான் “உன்னை விடமாட்டேன்” இதற்கு கதை, திரைக்கதை, வசனம் வாலியிடம் கொடுக்கப்பட்டது. இயக்குனருக்கு கே. சங்கர் அவர்களை போடப்பட்டது. தயாரிப்பாளராக தர்மராஜ் அவர்களும், ஒளிப்பதிவாளர் மாருதிராவும் இருந்தனர்.
வாலி 10 நாட்களில் கதை எழுதி முடித்தார். எம்ஜிஆருக்கு கதை பிடித்து போனது. இசையமைப்பாளராக யாரை போடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது புதிதாக வந்திருக்கிறானே இந்த பையன் நன்றாக இசையமைக்கிறான் என்று வாலி இளையராஜாவை சொல்ல எம்.ஜி.ஆரும் அதை ஒத்துக் கொள்கிறார்.
இப்படி வாலி எழுதி தந்த பாடல் டி எம் எஸ் சௌந்தரராஜன் மக்களின் குரலில் எம்ஜிஆருக்கு அனுப்பப்படுகிறது. எம்ஜிஆர் அவர்கள் டி எம் எஸ் அவர்களின் குரல் இதில் பொருந்தவில்லை என திருப்தி அடையவில்லை. பின் மலேசியா வாசுதேவன் பாடியும் திருப்தி அடையவில்லை. அவர்கள் இளையராஜாவையே உன் குரல் இதற்கு நன்றாக இருக்கும் பாடு என்று சொல்லி இந்தப் பாடல் ஒளிப்பதிவானது.
இது 1978 ஆம் ஆண்டு இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் எம்ஜிஆர். அப்பொழுது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருக்கிறார்.
அப்பொழுது வாலிக்கு ஒரே சந்தேகம் எப்படி முதலமைச்சராக இருந்து கொண்டு ஒரு படத்தை நடிப்பது. இப்படி வாலி எண்ணம் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது.
அப்பொழுது எம்ஜிஆர் நடிக்கப் போகும் படத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரதமர் கூறியது வெளிவந்தது. அப்பொழுது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அவரது பணிக்கு இடையூறு இல்லாமல் இந்த படத்தை நடிக்க வேண்டும் என்று நினைத்தால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் சொல்லியிருந்தார்.
என்ன காரணமோ தெரியவில்லை. படம் வெளிவரவில்லை. சட்ட சிக்கலா? இல்லை அரசியலா? இல்லை எதிர்க்கட்சிக்காரர்களின் செயலா? என்று தெரியவில்லை.