பானுமதியின் கை ஜோசியம் பலித்தது! அதனால் தான் எம்ஜிஆர் இப்படியானார்!

0
255
#image_title

நடிகை பானுமதி அவர்கள் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்த நடிகை. அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது அனைவருக்கும் தெரியும். தன் ஜோசியத்தால் 1954 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியாக வருவார். மக்களின் மனதில் வாழ்வார் என்று 20 வருடம் முன்னாடியே கணித்த நடிகை பானுமதி.

 

பானுமதி அடிக்கடி கைரேகை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவர் ஒரு சமயம் நீங்கள் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்ட பொழுது ஒரு பீரோ முழுக்க நாடி ஜோசியத்தை பற்றியும், கைரேகை ஜோஷத்தை பற்றியும், பலவிதமான புத்தகங்களை வைத்து இருந்தாராம்.

 

ஜாதகம் என்பது ஏதோ பொய் புனைசுருட்டு கிடையாது. அது கணிதம். பானுமதி சிறு வயசிலிருந்தே இதிலெல்லாம் ஈடுபாடு உள்ளவராம்.

 

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வீட்டிலிருக்கும் நாடி ஜோதிடத்தில் மூழ்கி விடுவாராம். அதை முறைப்படி கற்றுக்கொண்டாராம். சிவலிங்க வீரேசலிங்கம் என்று ஒரு சித்தர புருஷர் இருந்தார். அவரிடம்தான் கைரேகை, ஜோதிடக் கலையைக் கற்றுக் கொண்டாராம்.

 

எம்ஜிஆருக்கு கூட நான் ஜோதிடம் சொல்லி இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 

ஐந்து மொழிகளில் மலைகள்ளன் படம் உருவாகிக் கொண்டு இருந்த நேரத்தில், எம்ஜிஆருக்கு ஜோடி பானுமதி. அன்று பானுமதி உடன் சேர்ந்து நடித்தாலே அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுதான் என்று சொல்லும் அளவிற்கு அவர் புகழ் பெற்று நடிகையாக இருந்தார்.

 

அப்பொழுது பானுமதி கூறியது “எம்.ஜி.ஆரின் முகத்தில் ஒரு காந்தசக்தி இருந்ததைக் கவனித்தேன். நடை உடை பாவனைகளில் நாகரிகமும் தெரிந்தது. மரியாதையாக என்னை ‘அம்மா’ என்றுதான் கூப்பிடுவார். பானுமதி என்று சொல்லவே மாட்டார். ஸ்டுடியோவில் பணியாற்றும் லைட் பாயைக்கூட ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டுவிட்டுத்தான் சாப்பிட உட்காருவார். என கூறியுள்ளார்.

 

ஒரு சமயத்தில் மன்னர் கிரீடத்தில் எம்ஜிஆர் ஐ பார்த்த பானுமதி, அப்படியே உறைந்து போய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாராம். எவ்வளவு அழகான தோற்றம். கண்டிப்பாக முன் ஜென்மத்தில் இவர் ஒரு மன்னராக தான் இருந்திருக்க வேண்டும் என்று, மனசுக்குள் நினைத்துக் கொண்டிருந்தாராம்.

 

ஒரு நாள் படப்பிடிப்பில் பானுமதி ” எம்.ஜி.ஆர் அருகில் சென்று ‘மிஸ்டர் ராமச்சந்திரன் உங்கள் கையைக் காட்டுங்கள். எனக்குக் கொஞ்சம் கைரேகை ஜோதிடம் தெரியும் என்றேன். அவர் கூச்சத்துடன் ‘வேண்டாம் அம்மா எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது’ என்றார். சுற்றி இருந்தவர்கள் வற்புறுத்தலால் கையைக் காண்பித்தார். பார்த்த உடனே சொல்லிவிட்டேன். “மிஸ்டர் ராமச்சந்திரன் நீங்கள் பிற்காலத்தில் பேரும் புகழும் பெறப் போகிறீர்கள்! இந்த உலகமே கொண்டாடும் உன்னத ஸ்தானத்தை அடைவீர்கள்! ஆனால் சினிமாவால் அல்ல” என்று நான் கூறியதும் எல்லோரும் கை தட்டினார்கள். என்று கூறினார்.

 

காலங்கள் கடந்த ஓடியது. பானுமதியே அவர்கள் சொன்னதை மறந்து விட்டார்கள். அப்படி காலங்கள் உருண்டோடியதும் எம்ஜிஆர் ஆட்சிக்கு வருகிறார். எம்ஜிஆர் பாசத்தால் மக்களை கட்டுண்டு வைத்திருக்கிறார் . தமிழகமே எம்ஜிஆரை ஒரு இறைவனாக பார்க்கக்கூடிய நேரம் அது . அப்பொழுது ஒரு பாராட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. அதில் முன் இருக்கையில் பானுமதி அமர்ந்திருக்கிறார் .அப்பொழுது எம்ஜிஆர் அவர்கள் ” இந்த நிலைக்கு நான் வருவேன் என்று நானே எதிர்பார்க்காத காலத்தில் அன்றே என் கைரேகையைப் பார்த்து பானுமதி அம்மையார் கணித்துச் சொன்னார். அவரது ஜோதிடம் பலித்துவிட்டது’ என்றார். அரங்கமே அதிர்ந்து மாபெரும் கரகோஷம் வந்தது.

Previous article“மலைக்கள்ளன்” சிவாஜி எம்ஜிஆருக்கு விட்டுக் கொடுத்ததா? அல்லது சூழ்ச்சியா?
Next articleஇரண்டு நாளில் இறந்து விடுவேன் என்று சொன்னவர்! அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டவர்..! யார் அந்த நடிகை?