இதுவரை எத்தனையோ விருதுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த இரண்டு ரூபாயை மட்டும் இன்னும் பாதுகாத்து கொண்டிருக்கிறேன் என மம்மூட்டி கூறியுள்ளார்.
ஒரு நாள் மம்மூட்டி அவர்கள், படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாராம். அது ஒரு அடர்ந்த காடு, காரில் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டவாறே போய் கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென்று ஒரு வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர். காரை நிறுத்த முயன்றார். இந்த இரவு நேரத்தில் எதற்கு வம்பு என காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
அரை கிலோமீட்டர் சென்றதும் , அந்த முதியவரின் கண்களில் இருந்த தவிப்பை உணர்ந்த மம்மூட்டி காரை திருப்பி உள்ளார். அந்த பெரியவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
உடனே காரை நிறுத்தி “என்ன அய்யா வேண்டும் என கேட்டுள்ளார்”. உடனே அந்த பெரியவர் , பேத்தி வயிறு வலியால் துடிக்குதுயா யாருமே வண்டிய நிறுத்தல என்று கூற, அந்த பெண் மயக்கத்தில் கிடந்தாள். உடனே காரில் ஏறசொல்லி இருக்கிறார்.
கொஞ்சம் தூரம் வண்டி சென்றது ” இப்பொழுதுமா இவருக்கு நம்மை அடையாளம் தெரியவில்லை என எண்ணிக்கொண்டே வருகிறாராம்.
சிறிது தூரத்தில் மருத்துவமனை வந்தது. செவிலியர்கள் வந்த அந்த பெண்ணை அலைதுபோக அந்த பெரியவர் ஒரு இரண்டு ரூபாய் கிழிந்த நோட்டை என்னிடம் கொடுத்து வெச்சிகோ டீ சாப்பிடு என்று சொல்லி குடுத்தார். நான் இல்லை வேண்டாம் என சொன்னதும் பரவாயில்லை வெச்சிகோ என்று கொடுத்து விட்டு நகர்ந்தார். அப்பொழுது அவருக்கு தெரியாது போல அது செல்லாத காசு என்று.
நான் காரை விட்டு இறங்காததால் செவிலியர்கள் என்னை பார்க்கவில்லை.
எத்தனையோ தேசிய விருதுகள் பெற்ற எனக்கு, அவரின் முன் அனைத்தும் உடைந்துவிட்டது.
இந்த நிகழ்வை மம்மூட்டி அவர்கள் அவரின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.