5 ரூபாயில் கண்ணதாசன் பிரச்சனையும் தீர்ந்தது! எம்ஜிஆரின் பாடலும் பிறந்தது!

0
287
#image_title

கண்ணதாசன் தன் வாழ்க்கையில் நடப்பதை பாடல் மூலம் எழுதுவார் என்பது தெரியும் , அப்படி ஒரு பிரச்சனையில் மாட்டி இருந்த கண்ணதாசனை காப்பாற்றிய MGR பாடல்.

 

‘பரிசு’ 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

 

பரிசு என்ற படத்திற்கு கண்ணதாசனின் பாடல்கள் வேண்டும் என யோகநாத் அவர்கள் கண்ணதாசனை பார்க்க சென்றிருந்தார்கள்.

 

எம்ஜிஆர் அதில் ஒரு போலீசாக நடித்திருப்பார். அதில் குற்றவாளிகள் ஒரு காட்டில் சென்று மறைந்திருப்பார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க காட்டிலேயே மறு பகுதியில் மறைந்து அவர்களை கண்காணித்து வருவார் எம்ஜிஆர் . குற்றவாளிகளை இருக்கும் இடத்திற்கு செல்லும் போது ஒரு ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். அதில் படகோட்டி பெண்ணாக சாவித்திரி வருவார். அப்படி ஒவ்வொரு முறையும் செல்லும்போது ஐந்து ரூபாய் நோட்டை எம்ஜிஆர் சாவித்திரிக்கு வழங்குவார். இப்படி தினமும் வர, அப்பொழுது இருவருக்கும் காதல் ஏற்படும் பொழுது இந்த பாடல் வேண்டும் என அப்பொழுது கதையை சொல்லி முடித்தார். யோகநாத்.

 

கண்ணதாசனும் கண்ணை மூடிக்கொண்டு பாடல் வரிகளை எழுத வரும் பொழுதெல்லாம் அவருடைய பிரச்சனை நினைவுக்கு வந்தது. கண்ணதாசனுக்கு ஏதோ பிரச்சனை உள்ளது என்னவென்று யோகநாத் கேட்க , கண்ணதாசன் மற்றவருக்கு ஒரு காசோலை ஐந்தாயிரம் ரூபாய்க்கு கொடுத்திருந்ததாகவும் , பேங்கில் இப்பொழுது பணம் இல்லை. இன்றைக்கு அவர்கள் எடுக்கப் போகிறார்கள். அப்படி எடுக்கப்படும் பொழுது பணம் இல்லை என்றால் பெரிய சிக்கலாகிவிடும் என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார். இதைக் கேட்ட யோகநாத் அவ்வளவுதானே உடனே நான் 5000 பணத்தை உங்களது வங்கிக் கணக்கில் போட சொல்லுகிறேன் என ஐந்து ரூபாய் நோட்டு கட்டுகளைக் கொண்ட ஐயாயிரம் ரூபாய்களை தனது உதவியாளரிடம் கொடுத்து வங்கி கணக்கில் போட சொன்னார்.

இந்த சிச்சுவேஷனுக்கும் உடனடியாக பாடல் எழுதிக் கொடுத்தார் கண்ணதாசன். அந்த பாடல். எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் கண்ணை மூடி கண்ணதாசன் யோசிக்கும் பொழுது இந்த ஐந்து ரூபாய் வைத்து பாடல் எழுத வேண்டும் என பாடலை எழுதிக் கொடுத்துள்ளார்

 

தான் “என்ன என்ன

இனிக்குது ஏதேதோ

நினைக்குது வண்ண

வண்ண தோற்றங்கள்

அஞ்சு ரூபா

கண்ணை

வட்டமிட்டு மயக்குது

 

அஞ்சு ரூபா”

Previous articleமலையாள உச்சரிப்பு சரியில்லை! எம்ஜிஆரை நீக்கிய மலையாள இயக்குனர்!
Next articleஅடிக்கடி சிறுநீர் வருதா? கட்டுப்படுத்த நாட்டுமருந்து l இதோ!