தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டுமே 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 11,224 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த மூன்று தினங்களாக 500 க்கு குறைவான கொரோனா தொற்றே கண்டறியப்பட்டது. ஆனால் இன்று 639 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பாதிப்பு எண்ணிக்கையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 11224 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று மட்டும் 450 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று வரை சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 6750 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் விவரம்:
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 4172 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 78 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:
இன்று அரியலூரில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 353 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் இன்று செங்கல்பட்டில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்த பாதிப்பானது 498 ஆக உயர்ந்துள்ளது.கடலூரில் இன்று ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 417 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் இன்று 3 பேருக்கு பாதிப்பு உறுதியானாதால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 95 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரத்தில் 5 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் மதுரையில் 10 பேருக்கும் (மொத்தம் 160), நாகப்பட்டினத்தில் ஒருவருக்கும் (மொத்தம் – 50), திருவள்ளூரில் (மொத்தம் 546) 18 பேருக்கும்,திருவண்ணாமலையில் (மொத்தம் 151) 3 பேருக்கும், தூத்துக்குடி (மொத்தம் 70) மற்றும் திருநெல்வேலியில் (மொத்தம் 194), தலா ஒருவருக்கும் என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.