3 நாள் தூங்காமல் படக்குழுவை அழ வைத்த நடிகர் திலகம்!

0
224
#image_title

சிவாஜி என்ற நடிப்பு ஆற்றலுக்கு ஈடு இணை இன்றளவும் தமிழ் திரை உலகில் இல்லை,என்றே கூறலாம். அப்படி ஒரு படத்திற்காக தான் என்னவெல்லாம் செய்தார் என்பதை இவர் மூலம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!

 

அப்படி ஒரு படத்திற்காக மூன்று நாள் தூங்காமல், நடித்த பொழுது படக்குழுவே அழுததாம். அந்த கதை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

 

1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாசமலர் படத்தை மிஞ்சும் அளவிற்கு அண்ணன் தங்கை பாசத்தில் எந்த படமும் இல்லை, என்றே கூறலாம். எத்தனையோ அண்ணன் தங்கை படங்கள் வந்தாலும் இந்த படத்திற்கு ஈடாகாது.

 

அப்படி கே.பி. கொட்டாரக்கரா பாசமலர் கதையை எழுதியவர் இவர். இவர் இந்த கதையை வைத்துக் கொண்டு எத்தனையோ இயக்குனர்களிடம் ஏறி இறங்கியுள்ளர் யாரும் படத்தை இயக்க தயாராக இல்லை. அதன் பிறகு பீம் சிங்கை காணலாம் என்று நினைத்தார் கேபி கொட்டாரக்கரா. ஒரு துண்டு சீட்டில் அண்ணன் தங்கை காதல் கதை என எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

 

இதை பார்த்த பீம்சிங் அண்ணன் தங்கை காதலா?. இது சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளதே என்று நினைத்து முழுமையான கதையைக் கேட்க அவரை அழைத்துள்ளார்.

 

கதையைக் கேட்ட பீம்சிங் கதாசிரியர் கொட்டாரக்கரா அள்ளி அணைத்து பாராட்டியுள்ளார். இதில் அண்ணனாக சிவாஜிகணேசனும் தங்கையாக சாவித்ரி அவர்களும் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்து படம் எடுக்கப்பட்டது.

 

இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் சிவாஜுக்கு கண்கள் தெரியாமல் போய்விடும். தன் தங்கையை பார்ப்பதற்காக வருவார். சிவாஜியும் இறந்துவிடுவார். தன் அண்ணன் இறந்ததை பார்த்த சாவித்திரியும் இறந்து விடுவார்.

 

இந்தப் படத்தில் தன் முகத்தில் சாவு கலை வரவேண்டும் என்று நினைத்திருக்கிறார் சிவாஜி. அதனால் தனது வீட்டின் தனி அறையில் போய் அமர்ந்திருக்கிறார். ப்ரொஜெக்டரில் படங்களை தூங்காமல் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார் . ப்ரொஜெக்டர் சூடான உடன் தனது வீட்டு மாடியிலேயே நடந்துள்ளார்.

 

அதன் பிறகு படபடத்திற்குச் சென்று அந்த இறுதி காட்சியை நடித்துக் கொடுத்திருக்கிறார். மூன்று நாள் தூங்காமல் அந்த காட்சியை தத்ரூபமாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்ற நினைத்த சிவாஜி நடிப்பை பார்த்த பட குழுவே அழுததாம்.

 

அந்தக் காட்சியை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. இன்றளவும் நம் கண்களில் கண்ணீர் வருகிறது என்றால் அந்த காட்சியை நடித்து சிவாஜி கணேசன் சாவித்திரியுமே காரணம்.

 

Previous articleஅமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்! முன்னாள் அதிபருக்கு கிடைத்த முதல் வெற்றி!
Next articleமுதல் நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்! அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!