தலைமை செயலாளர் திமுக எம்பிக்களை நடத்திய விதம் குறித்து தயாநிதி மாறன் பத்திரிக்கையாளர்களிடம் கூறிய வார்த்தை தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து மென்மையான கண்டனங்களை தெரிவித்த திருமாவளவளன் எம்.பிக்கு பலதரப்பட்ட மக்களிடமிருந்து எதிர்ப்புகளும் அவர் மீது சில விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வர்மா எங்கிற கார்ட்டூனிஸ்ட் ஒருவர், திருமாவளவன் எம்.பி அவர்கள் திமுக தரப்பிடம் மட்டும் மென்மையான போக்கை கடைபிடிப்பதற்கு அவர் வகித்து வரும் பதவியே காரணம் என்று குறிப்பிடும் விதமாக கார்ட்டூன் படம் ஒன்றினை கடந்த 16ம் தேதி வெளியிட்டிருந்தார்.
அதே நாளில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை கார்ட்டூன் படத்தை வைத்து விமர்சனம் செய்த விசிக நிர்வாகி வன்னியரசுக்கு தண்டனைகள் எதுவும் கிடையாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மூன்றாம் தர குடிமக்கள் என்று கூறிய தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்காத அரசு, கார்ட்டூனிஸ்ட் வர்மா மீது மட்டும் ஏன் என்று ட்வீட்டரில் கேள்விகள் குவிகின்றன.
கைது செய்யப்பட்டுள்ள கார்டூனிஸ்ட் வர்மாவுக்கு நீதி வேண்டும் என்று பலதரப்பிலுமிருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து பதிவிட்டவர்களின் சில பதிவுகள்.