ஒரு லட்சம் மக்களில் இத்தனை பேருக்கு தான் கொரோனா – நம்பிக்கை தரும் சுகாதார அமைச்சகம்

0
127

கடந்த ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய அளவில் 96,169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை 36,824 பேர் கொரோனாவிலிருந்து மீண்டும், 3,029 பேர் இறந்துள்ளனர்.

உலக அளவில் இந்தியா கொரோனா தொற்று பாதித்த நாடுகளின் வரிசையில் 11வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவ துவங்கிய கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு ஆறுதல் தரும் விதமாக மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா தொற்று குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் இதுவரை ஊக்கமளிக்கும் முடிவுகளையே காட்டியுள்ளன. இந்தியாவில் தற்போது இரட்டிப்பு விகிதம் அடைய 7 நாட்கள் என்ற அளவில் உள்ளன. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 38.29 சதவீதமாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது” என்று கூறியுள்ளது.

இது மக்களுக்கு ஆறுதலையும், நிம்மதியையும் தந்துள்ளது.

Previous articleமூன்று மாதங்களுக்கு 144 தடை நீட்டித்த மாநில அரசு! கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை.!!
Next articleஇந்திய அணி கிரிக்கெட் வீரார்களுக்கு மத்திய அரசு தளர்வு! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!