43 இந்தியர்களை நாடு கடத்தியது மாலதிவு அரசு!
சாவிதிகளை மீறியதாகவும் போதை பொருள் குற்றங்களின் ஈடுபட்டதாகவும் 43 இந்தியர்கள் உட்பட 186 பேரை மாலத்தீவில் இருந்து வெளியேற்றியுள்ளது அந்நாட்டு அரசு.
இதில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் 83 பேர், இந்தியர்கள் 43 பேர், இலங்கை 25 பேர், உழைப்பாளர் 8 பேர் என 186 பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் அபு லகுசான் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாலத்தீவில் சட்ட விரோதங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து பொருளாதார அமைச்சகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
சட்டவிரோத தொழில் அமைப்புகளை மூடி அதில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்றும் பணிகளில் உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வெளிநாட்டவர்களின் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க காவல்துறையினர் வாரத்திற்கு மூன்று முறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.” எனக் கூறினார்.