அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலநடுக்கம்!! பீதியில் உறைந்த மக்கள்!!
திடீரென ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கடந்த வாரம் ஏற்கனவே அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டது.
புவித்தட்டு நகர்வினால் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதுவும் கடலில் நிலநடுக்கம் உண்டானால் கட்டாயம் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சாதாரண பகுதியிலேயே புவி தட்டுகள் லேசாக நகர்ந்தாலே நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் வீடுகள் குலுங்கும். ஆனால் ரிங்க் ஆப் பையர் என்று கூறப்பட்டு வரும் புவி தட்டுகள் ஒன்றுடன் ஒன்று அடிக்கடி மோதிக்கொள்ளும் பகுதியில் உள்ள ஜப்பானின் நிலைமையை பற்றி சொல்லவே வேண்டாம். அங்கு அடிக்கடி மோதிக் கொள்ளும் புவி தட்டுகளால் சர்வ சாதாரணமாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
இதேபோல் ஏற்பட்ட புவி தட்டு மோதலால் கடந்த வாரம் ஜப்பானின் ஷிகோகுவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து இதன் பரபரப்பு அடங்குவதற்குள் ஜப்பானின் ஹரா பகுதியில் நேற்று மாலை 4:49 மணி அளவில் மீண்டுமோர் நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் அதிக அளவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் இதுவரை ஏதும் வெளியிடப்படவில்லை.