அதிமுக அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் – போட்டு கொடுத்த விபி துரைசாமி

0
153

ஒரு பக்கம் கொரோனா காரணமாக தமிழகம் தத்தளித்து வந்தாலும், மறுபக்கம் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலையே நிலவி வருகிறது.

திமுக வில் துணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்த விபி துரைசாமி கடந்த சில தினங்களுக்கு முன் பாஜகவின் தமிழக தலைவரை நேரில் சந்தித்தார். இதனால் திமுக பாஜக பக்கம் சாய்கிறதோ என்ற விவாதம் எழுந்தது. இதனையடுத்து அவர் அதிரடியாக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியது திமுக.

கட்சி பதவியிலிருந்து நீக்கப்படும் வரை தான் எந்த சூழ்நிலையிலும் திமுகவிலிருந்து விலக மாட்டேன் என கூறி வந்த விபி துரைசாமி, பதவி நீக்கம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் பாஜகவில் இனைந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலின் மீது விமர்சனங்களை வைத்து வரும் துரைசாமி, திமுகவை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுகவின் அமைச்சர்களுடன் தொடர்பிலிருந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தெர்தல நெருங்கும் வேளையில் பலர் திமுகவிலிருந்து விலகி அதிமுக மற்றும் பிற கட்சிகளில் இனைய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில் துரைசாமியின் இந்த கருத்து திமுக வட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதிமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி திடீர் கைது
Next articleபேருந்து வசதிக்கு இந்த எண்களை அணுகவும் – அசத்தும் மாநகர போக்குவரத்துக் கழகம்