கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு!! தமிழ்நாடு வேளாண் துறையில் அலுவலக உதவியாளர் வேலை!!
தமிழ்நாடு அரசு வேளாண் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: தமிழக வேளாண் துறை
பணி: அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02
கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் 18 வயதை நிரம்பியவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை:
அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.tnagrisnet.tn.gov.in/includes/noti/AF.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
முகவரி:
Director of Agriculture,Directorate,IT section,4 th Floor,1,Wallahjah Rd,PWD Estate,Chepauk,Triplicane,Chennai,Tamil Nadu 600 005.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 30-03-2024