இன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு!

0
307
#image_title

இன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு!

இரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு இனிமேல் அதாவது இன்று(ஏப்ரல்1) முதல் பணம் செலுத்த தேவையில்லை என்று இரயில்வே துறை மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதாவது ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் யூபிஐ(UPI) என்ற ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கடைகளில் பொருட்கள் வாங்குவது, மருத்தவமனையில் மருந்துகள் வாங்குவது, டீ கடை முதல் எல்லா இடத்திலும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை வந்துவிட்டது. இத்தகைய ஆன்லைன் பணப் பரிவர்த்தனை பேருந்துகளில் டிக்கெட் எடுப்பதற்கும் இரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப் படாமல் இருந்தது.

அதாவது பேருந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் நேரடியாக சென்று டிக்கெட் வாங்கும் பொழுது ஆன்லைன் பணப் பரிவர்த்தனை பயன்படுத்தப்படாமல் இருந்தது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாக இரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது மட்டும் பணப் பரிவர்த்தனை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதையடுத்து முன்பதிவு செய்யக் கூடிய பெட்டிகளை தவிர முன்பதிவு செய்யப்பட முடியாத பெட்டிகளுக்கு நேரடியாக இரயில் நிலையங்களுக்கு சென்று டிக்கெட் எடுக்கும் பொழுது ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் இரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து வந்தனர். பயணிகளின் நீண்டநாள் கோரிக்கைக்கு இரயில்வே துறை செவி சாய்த்துள்ளது.

இரயில்வே துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயணிகள் நேரடியாக சென்று முன்பதிவு அல்லாத பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை. யுபிஐ எனப்படும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலமாக பணம் செலுத்தி டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறை இன்று முதல் அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து இரயில் நிலையங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள என்றும் அறிவித்து உள்ளது.

Previous articleகல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு!! தமிழக காவல் துறையில் அசத்தல் வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
Next articleகடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு!