சுனில் நரைனின் அதிரடியான பேட்டிங்! 272 ரன்களை குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

0
269
#image_title

சுனில் நரைனின் அதிரடியான பேட்டிங்! 272 ரன்களை குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்3) லீக் ஆட்டத்தில் சுனில் நரைன் அவர்களின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 272 ரன்கள் குவித்து டெல்லி கேபிடல்ஸ் அணியை திண்டாட வைத்தது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்3) லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தூக்கம் முதலே சுனில் நரைன் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். பேட்டிங்கில் தொடர்ந்து அதிரடி காட்டிய சுனில் நரைன் 39 பந்துகளில் 7 சிக்ஸ் மற்றும் 7 பவுண்டரிகள் விளாசி அரைசதம் அடித்து 85 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்சி அதிரடியாக விளையாட அவருடன் இணைந்த ரஸல் அவருடைய அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாட சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய ரகுவன்சி அரைசதம் அடித்து 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற தொடர்ந்து அதிரடி காட்டிய ரஸல் 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் இரண்டு விக்கெட்டுகளையும் கலீல் அஹமது, மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

20 ஓவர்களில் 273 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் 33 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. அதன் பிறகு களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு புறம் ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை காட்ட மறுபுறம் விக்கெட்டுகளும் சரியத் தொடங்கியது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்து அரைசதம் அடித்து 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சற்று சிறப்பாக விளையாடிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க டெல்லி அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய சுனில் நரைன் அவர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 272 ரன்கள் அடித்து ஆர்சிபி அணியை பின்னுக்கு தள்ளி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருக்கின்றது.

Previous article12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நேர்காணல் அடிப்படையில் ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலை!!
Next articleபிரச்சாரத்தின் முதல் நாளிலேயே பெண் வேட்பாளர் சுட்டுக் கொலை! அதிர்ந்து போன மெக்சிகோ சிட்டி!