பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே பெண் வேட்பாளர் சுட்டுக் கொலை! அதிர்ந்து போன மெக்சிகோ சிட்டி!

0
243
#image_title

பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே பெண் வேட்பாளர் சுட்டுக் கொலை! அதிர்ந்து போன மெக்சிகோ சிட்டி!

மெக்சிகோ நாட்டில் முதல் நாளில் பெண் மேயர் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் பிரதமர்கள் சிலர் அந்த பெண் மேயர் வேட்பாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மெக்சிகோ நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான மெக்சிகோ நாட்டில் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

இதையடுத்த தேர்தல் நடைபெறவுள்ள அதே நேரத்தில் மெக்சிகோ நாட்டில் வன்முறைகளும் துப்பாக்கி சுடும் நடைபெற்று வருகின்றது. அதே போல சில அரசியல் ரீதியான கொலைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் பெண் மேயர் வேட்பாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆளும் கட்சி சார்பாக போட்டியிடும் பெண் மேயர் வேட்பாளரான கிசெலயா கெய்டன் அவர்கள் தனது முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த மர்மநபர்கள் பெண் மேயர் வேட்பாளர் கிசெலயா கெய்டன் அவர்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

38 வயதான கிசெலயா கெய்டன் அவர்கள் முன்னாள் வழக்கறிஞர் ஆவார். இவர் சுட்டு படுகொலை செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். மேலும் லஞ்சம் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கவும் கெலயா பகுதியின் பாதுகாப்பை உறுதி படுத்துவேன் எனவும் அதில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பெண் மேயர் வேட்பாளர் கிசெலயா கெய்டன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேர்தலில் நிற்கப் போவதாக கூறிய 14 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleசுனில் நரைனின் அதிரடியான பேட்டிங்! 272 ரன்களை குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
Next articleசாதியை வைத்து இதனால்தான் படம் எடுத்தேன் – கமல்ஹாசன் அளித்த விளக்கம்!!