நடிகைஅமலாவை காதலித்த வில்லன் நடிகர்; ஹீரோவுக்கு ஓகே சொல்லி இரண்டாம் தாரமான அமலா!

0
198
Villain actor who fell in love with actress Amala; Amala, the second character, says OK to the hero!
Villain actor who fell in love with actress Amala; Amala, the second character, says OK to the hero!

நடிகைஅமலாவை காதலித்த வில்லன் நடிகர்; ஹீரோவுக்கு ஓகே சொல்லி இரண்டாம் தாரமான அமலா!

தமிழ் சினிமாவில் 80 களில் ரஜினி கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் தான் நடிகை அமலா.இவர் கமலுடன் நடித்த சத்யா படத்தில் இடம்பெற்ற வளையோசை பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.

நடிகை அமலா கடந்த 1992ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பின்னர் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகிய அமலா கடந்த 2022 ஆம் ஆண்டு கணம் என்ற படம் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், அமலா குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் தனது குரல் மூலமே வில்லத்தனத்தில் மிரட்டி வந்த நடிகர் ரகுவரன் கடந்த 1987ஆம் ஆண்டு கூட்டுப்புளுக்கள் என்ற படத்தில் நடிகை அமலாவுடன் இணைந்து நடித்துள்ளார்.அந்த சமயத்தில் அமலா மீது காதல் ஏற்படவே ரகுவரன் அவரின் காதலை கூறியுள்ளார்.

ஆனால் அமலா ரகுவரனின் காதலை நிராகரித்து விட்டாராம். அது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக ரகுவரனே அந்த சமயத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.அதன் பின்னர் தான் நடிகர் நாகார்ஜுனாவை அமலா காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.

அந்த சமயத்தில் நாகார்ஜுனாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகி இருந்தது.நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. நாகார்ஜுனா – அமலா தம்பதிக்கு அகில் என்ற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். இவரும் தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற தனுஷ் – ஐஸ்வர்யா; இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை!
Next articleபணம் கொடுத்தால் வாங்கிக்கலாம் ஆனால் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி பேச்சு!