மாணவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!
நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயரப் போகின்றது என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பன்னிரன்டாம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் அனைவரும் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் கல்வி கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்காக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுதான் மூன்று வகையான கல்விகளுக்கும் கட்டணங்களை நிர்ணயம் செய்யவுள்ளது.
இதையடுத்து பொறியியல் படிப்புகளை வழங்கும் நடத்து கல்லூரிகள், தனியார் கல்வி நிர்வாகங்கள் அனைத்தும் 25 சதவீதம் கல்வி கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருக்கின்றது.இந்நிலையில் பொறியியல் படிப்புகள், கல்வியியல் படிப்புகள், துணை பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயரும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
பல வகையான செலவினங்கள் அதிகரித்து இருப்பதால் கல்வி கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்பொழுது உயர்த்தப்படும் கல்வி கட்டணம் அடுத்த மூன்று ஆண்டுகள் அமலில் இருக்கும்.
மாற்றப்படவுள்ள புதிய கல்வி கட்டணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.தற்பொழுது பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து படிக்க 50000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போல பொறியியல் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து படிக்க 85000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது.