கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 17ம் தேதி மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்ததையடுத்து ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்தை துவக்க இந்திய அரசு முடிவு செய்தது.
ஏற்கனவே ரயில் போக்குவரத்து துவங்கிய நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமுள்ளதால் தமிழகத்திற்கு வரும் 31ம் தேதி ரயில், மற்றும் விமான போக்குவரத்து இயக்க வேண்டாம் என முதல்வர் மத்திய அரசிடம் கேட்டு கொண்டார். அதனால் வரும் ஜூன் 1லிருந்து இயக்கப்படும் 200 ரயில்களில் ஒரு ரயில் கூட தமிழகத்திற்குத் திட்டமிடப்படவில்லை
இந்நிலையில் பொதுமக்கள் கோரிக்கையின் பெயரில் நேற்று இரவு தமிழக அரசு உள்நாட்டு விமான சேவை தொடங்குவதற்கான ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார ஏற்பாடுகளை விமான நிலைய சிறப்பு அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, சைலேந்திர பாபு உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆய்வை மேற்கொண்டனர்.
விமான நிலையத்தில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
மின்னிலக்க பலகைகளில் கொரோனா விழிப்புணர்வு குறித்த காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப் பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணிகள் இன்று அதிகாலை 2 மணியிலிருந்து விமான நிலையத்தில் குவியத் தொடங்கினர்.
காலை 06.35 மணிக்கு இண்டிகோ விமானம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது. அதனைத்தொடர்ந்து மற்ற விமானங்களும் புறப்பட்டன.
இன்று சென்னையிலிருந்து இயங்கப்படும் விமானங்கள்
- டெல்லி – 6:35 – INDIGO
- பெங்களூர் – 6:45 – INDIGO
- மதுரை – 7:05 – INDIGO
- பெங்களூர் – 7:15 – SPICEJET
- போர்ட் பிளேர் – 8:35 – INDIGO
- டெல்லி – 8:55 – AIR ASIA
- கோயம்புத்தூர் – 9:15 – SPICEJET
- கவுஹாத்தி – 9:25 – INDIGO
கீழ்கண்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
- மதுரை – 5:40 INDIGO
- மும்பை – 6 : 15 INDIGO
- மும்பை – 6 :25 SPICEJET
- பெங்களூர் -7: 20 SPICEJET
- சேலம் 7: 25
- கொல்கத்தா 7 :35 INDIGO
- கெஹாத்தி 7 : 45 SPICEJET
- கொச்சி 8 : 00
- பெங்களூர் 8 : 15 AIR ASIA
- ஹைதராபாத் 8: 30 INDIGO
- புனே 9 : 00 INDIGO
- மும்பை 9 : 00 INDIGO
- ஹைதரபாத் 9 : 05 AIR ASIA
- பெங்களூர் 9 :20 SPICEJET
- ஹைதராபாத் 9 :30 INDIGO