கோடை காலத்தில் முகம் பளபளப்பாக இருக்க ஹோம்மேட் பேஸ் வாஷ் க்ரீம் தயாரித்து பயன்படுத்துங்கள்!!

0
194
Make and use homemade face wash cream to keep your face glowing during summer!!
Make and use homemade face wash cream to keep your face glowing during summer!!

கோடை காலத்தில் முகம் பளபளப்பாக இருக்க ஹோம்மேட் பேஸ் வாஷ் க்ரீம் தயாரித்து பயன்படுத்துங்கள்!!

கோடை காலத்தில் முகத்தை முறையாக பராமரிப்பது அவசியம்.ஆனால் பணிச்சுமை போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் சருமத்தை பராமரிக்க தவறுகின்றனர்.

சரும பிரச்சனை ஏற்படும் பொழுது சந்தையில் விற்கக் கூடிய இரசாயன பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் இளம் வயதில் முதுமை தோற்றத்தை அடைந்து விடுவோம்.எனவே இயற்கை பொருட்களை கொண்டு முகத்தை பளபளப்பாக மாற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஆரஞ்சு தோல்
2)தேன்
3)காபி
4)தேங்காய்
5)பாதாம் பருப்பு

பேஸ் வாஸ் க்ரீம் தயார் செய்வது எப்படி?

*ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை மற்றும் இரண்டு தேங்காய் துண்டுகளை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

*இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து பொடி செய்து கொள்ளவும்.பிறகு 4 பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

*பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த ஆரஞ்சு மற்றும் தேங்காய் பொடியை சேர்க்கவும்.அதன் பின்னர் பாதாம் பபேஸ்ட்டை அதில் சேர்த்து கலந்துவிடவும்.

*பின்னர் 1/4 தேக்கரண்டி காபி தூள்,2 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பிறகு சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து க்ரீம் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.

இதை க்ரீமை முகத்திற்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்து வந்தால் கரும்புள்ளிகள்,முக வறட்சி,முகக் கருமை நீங்கி முகம் பொலிவாகும.

Previous articleஅல்சர்: தேங்காய் பாலில் இந்த இலையின் சாற்றை சேர்த்து குடியுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!
Next articleவெயிலால் காய்ந்து போன உங்கள் உடலை குளுமையாக்கும் நுங்கு பால்!! இதை எவ்வாறு தயாரிப்பது?