தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு நோய் பரவலைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 15,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தை பொருத்த வரை கோயம்பேடு காயகறி சந்தை கொரோனா பரவலுக்குப் பெரியா ஹாட்ஸ்பாடாக விளங்கியது. இதனைத் தொடர்ந்து வங்கிகளின் அலட்சியப் போக்கால், இந்த வரிசையில் ATM மையங்களும் சேர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ங்கிக
குறுகிய இடத்தில் தொற்று பரவும் வாய்ப்புள்ள இடமாக விளங்கும், ATM மையங்கள் கவனிப்பாரின்றி கிடக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய பரிவர்த்தனைக்கு மட்டுமே வங்கிகள் செயல்பட்டு வருவதால், தினமும் ஏராளமானோர் ATM மையங்களைப் பயன்படுத்து வருகின்றனர். இதனால், இங்கு தொற்று பரவ வாய்ப்பு அதிகம்.
ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிகள் தங்களது, ATM மையங்களில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அரசு அறிவுறுத்தல் படி கிருமி நாசினி கொண்டு ATM மையங்களை சுத்தப்படுத்துவதோ, வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர்களை வைப்பதோ இல்லை. அதே போல் சமூக இடைவெளியை உறுதி செய்வதுமில்லை. இவ்வளவு ஏன் சில வங்களின் ATM மையங்களில் குப்பைகள் கூட கூட்டப்படுவது இல்லை.
இதனால் பண பரிவர்த்தனைக்காக வந்து செல்லும் வாடிக்கையாளரகளின் ஆரோக்கிய பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.
தங்கள் ATM மையங்களில் வங்கிகள் சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ளா விட்டால் அது கொரோனா தொற்று பரவ கூடிய இடமாக மாற அதிக வாய்ப்பிருப்பதால், அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சகோதர சகோதரிகளே, நீங்கள் ATM மையங்களை பயன்படுத்தும் போது அங்கு அடிப்படை சுகாதார பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தால் மட்டும் அதனுள் செல்லுங்கள்.