நடிகர் சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள்….!!!

0
240
சல்மான் கான்
சல்மான் கான்

பிரபல நடிகர் சல்மான் கான் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை இவர் வீட்டருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பாடி இன்று அதிகாலை 5 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு கூட இங்கிலாந்தில் இந்திய மாணவர் ஒருவர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

கடந்த 1998ஆம் ஆண்டு சல்மான் கான் மான் வேட்டை வழக்கில் சிக்கினார். அப்போது முதல் இவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் பிஸ்னோய் சமூகத்தில் மான் வேட்டையாடுவது பெரிய குற்றமாகும். எனவே கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஸ்னோய் சல்மான் கானை தீர்த்து கட்ட முயற்சி செய்தார். ஆனால் தற்போது அவர் சிறையில் உள்ளார்.

இருப்பினும் அவரின் கூட்டாளிகள் சல்மான் கானை தாக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஒருவேளை இப்போது நடந்த தாக்குதல் கூட அவர்கள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே மும்பை போலீசார் நடிகர் சல்மான் கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

Previous articleKerala Recipe: காரசாரமான கப்பக்கிழங்கு பொரியல் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?
Next articleஅண்ணாமலை ஓட்டு கேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள் – காயத்ரி ரகுராம்….!!