GOLD RATE: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்!! ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது!!
இந்தியாவில் தங்கம் அமோகமாக விற்பனையாகி வருகிறது.சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது வழக்கம் என்பதினால் அதற்கு எப்பொழுதும் தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது.பணக்காரர்கள் மட்டும் அல்ல ஏழை,நடுத்தர மக்களுக்கும் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருந்து வருகிறது.
தங்கத்தை ஆபரணம்,தங்க காசு மற்றும் தங்க பத்திரமாக முதலீடு செய்வதை மக்கள் விரும்புகின்றனர்.நிலத்திற்கு அடுத்து தங்கம் தான் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தங்கம் அதிரடி விலை ஏற்றம் கண்டு வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.ஆனால் இந்த விலை ஏற்றம் குண்டுமணி தங்கம் வாங்க கூட கஷ்டப்படும் நபர்களுக்கு கவலை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.
நேற்று தங்கம் விலை சற்று இறக்கம் கண்ட நிலையில் இன்று அதன் விலை மளமளவென அதிகரித்து இருக்கிறது.
சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.6,835க்கும் 1 சவரன் ரூ.54,680க்கும் விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து 1 கிராம் ரூ.6,890க்கும் சவரனுக்கு ரூ.440 அதிகரித்து 1 சவரன் ரூ.55,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 அதிகரித்து 1 கிராம் ரூ.7,516க்கும் சவரனுக்கு ரூ.480 அதிகரித்து 1 சவரன் ரூ.60,128க்கும் விற்பனையாகின்றது.
மேலும் வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.90க்கும் ஒரு கிலோ ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை உயர்வால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.