கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்.. மக்களே உஷார்.!
கேரளாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகததில் பறவைக் காய்ச்சல் வைரஸ் வராமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட கேரளாவில் பறவை காய்ச்சல் வைரஸ் காரணமாக 21,000 வாத்துக்களை கொன்று எரித்தனர்.
இந்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமெடுத்து வருகிறதாம். அதன்படி அங்குள்ள 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் உள்ள மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல பசு மாடுகளில் இருந்து கறக்கப்பட்ட பாலில் கூட ஹெச்5என்1 என்ற பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கறந்த பாலை யாரும் அருந்த வேண்டாம் எனவும், சுத்திகரிக்கப்பட்ட பாலை மட்டுமே அருந்துவது மட்டுமே பாதுகாப்பாக இருக்கும் என்றும் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஏனெனில் பாலை சுத்திகரிக்கும்போது அதில் இருந்து வைரஸ்கள் அழிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் பறவைக் காய்ச்சலால் மனிதர்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. மேலும் தற்போது பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு மட்டுமல்லாது வெளவால்கள், கரடி, பூனை, நரி மற்றும் பென்குயின்களுக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்போது கறந்த பாலிலும் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.