என் முடி முதல் அனைத்தும் மாறிவிட்டது! கூகுளில் 20 வருட பயணம் குறித்து சுந்தர் பிச்சை பதிவு!!
கூகுள் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி 20 வருடங்கள் ஆனது குறித்து சுந்தர் பிச்சை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
உலகில் நம்பர் 1 தேடுதளமாக தற்பொழுது வரை இருந்து வருவது கூகுள் நிறுவனம் ஆகும். உலகில் என்ன தேவை என்றாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும். அனைத்துக்கும் சரியான தீர்வு கூகுளில் தேடினால் கிடைக்கும்.
எந்தவொரு பொருளையோ அல்லது எதாவது ஒரு தகவலை அறிய வேண்டும் என்றால் நம்முடைய கைகள் உடனே கூகுள் வலைதளத்திற்குத் தான் செல்லும். அப்படிப்பட்ட வலைதளத்தின் சியிஓ ஆக சுந்தர் பிச்சை அவர்கள் பணியாற்றி வருகிறார்.
கூகுள் நிறுவனத்தின் சியிஓ சுந்தர் பிச்சை அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். அதன் பின்னர் சொந்த முயற்சியினாலும் திறமையினாலும் கூகுள் நிறுவனத்தின் சியிஓ ஆக பதவி உயர்வு பெற்று கூகுளில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கூகுளில் இணைந்து 20 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அந்த பதிவில் கூகுள் நிறுவன சியிஓ சுந்தர் பிச்சை அவர்கள் “ஏப்ரல் 26ஆம் தேதி 2004ம் வருடம் கூகுள் நிறுவனத்தில் என்னுடைய முதல் நாள் ஆகும். அதன் பின்னர் நிறைய மாறிவிட்டது. தொழில்நுட்பம் மாறிவிட்டது. எங்களுடைய தயாரிப்புகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மாறிவிட்டது. ஏன் என்னுடைய தலை முடி கூட மாறிவிட்டது.
மாறாதது என்ன இருக்கின்றது. இந்த அற்புதமான நிறுவனமாக இருக்கும் கூகுளில் நான் பணியாற்றுவதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன். 20 ஆண்டுகள் ஆகியும் என்னை நான் இன்னும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்” என்று சியிஓ சுந்தர் பிச்சை அவர்கள் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.