பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்

0
191

கொரானா நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் சொந்தங்கள் ஒன்று கூடும் சுப நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்தது‌. எனினும் 20 நபர்களுக்கு மிகாமல் பாதுகாப்புடன் திருமணங்கள் நடத்தலாம் எனவும் அரசு அனுமதியளித்தது.

இந்நிலையில் மும்பையில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஜோடிக்கு தமிழ்நாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மும்பையிலிருந்து தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. நமது நாட்டில் குறிப்பாக தென்னிந்தியாவில் நிச்சயித்த தேதியில் திருமணம் நடைபெறவில்லை என்றால் அதை அபசகுணமாக பார்க்கும் வழக்கம் உள்ளது.

எனவே அந்த ஜோடி, நிச்சயித்த தேதியில் பெற்றோர்கள் சம்மதத்துடன் எளிமையாக மும்பையிலுள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை
நடத்தி பார்ப்பதென்பது வாழ்நாள் கனவாக இருக்கும்.

ஆனால் இந்த பொதுமுடக்கத்தால் மணமக்களை நேரில் வாழ்த்த கூட முடியாமல் மணமகளின் தந்தையும் தாயும், தங்கள் சொந்த ஊரான மதுரை அருகிலிருக்கும் குருவித்துறையிலிருந்படியே வீடியோ கால் மூலம் கண்கலங்க வாழத்தியுள்ள்னர். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது.

தொழில்நுட்பங்கள் மூலம் ஆறுதல்கள் இருந்தாலும் மணமக்கள் அருகில் இருந்து அட்சதை தூவி வாழ்த்தும் ஆனந்த நிகழ்வை தவரவிடவைத்ததே இச்சூழ்நிலை என்பதே அவர்கள் கண்ணீருக்கு காரணம்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி பார்ப்பவர்களையும் உணர்ச்சி வயப்பட வைக்கிறது.

Previous articleஜெயலலிதாவின் அதிகார்வபூர்வ வாரிசுகள்! – அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்
Next articleகொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை – அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு