பெண்களே.. ஸ்டாப்பில் பேருந்துகள் நிற்காமல் செல்கிறதா? அப்போ உடனே இதை செய்யுங்கள்!
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.பள்ளி செல்லும் பிள்ளைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பேருந்து பயணம் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.
மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று திமுக அரசு அறிவித்தது.பின்னர் மாநகர பேருந்துகளின் பயன்பாட்டை குறைத்து பெண்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் மாநகர பேருந்துகள் நிறுத்தத்தில் நிறக்காமல் செல்கிறது என்பது பெண்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.தலைநகர் சென்னையில் உள்ளவர்களுக்கே இந்த நிலைமை என்றால் கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் நிலையை என்னவென்று சொல்வது.
இந்த நிலையில் ஸ்டாப்பில் நிற்காமல் செல்லும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக மாநகர போக்குவரத்து கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு அனுமதித்த ஸ்டாப்பில் பேருந்து நிற்காமல் சென்றால் அப்பேருந்தின் பதிவு எண்,வழித்தட எண்,பேருந்து நிற்காமல் சென்ற நேரம் மற்றும் நிறுத்தம் குறித்த தகவலை “149” என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம் புகார் அளிக்கலாம்.புகாருக்கு உள்ளான பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து இருக்கிறது.