தமிழகத்தில் உச்சநிலையை எட்டும் கொரோனா

0
124

தமிழகத்தில் கொரோனா பரவ துவங்கிய சில நாட்கள் மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பாதிப்புகள் இருந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது

இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 817 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18545 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் கொரோனா பாதிப்பால் ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133னாக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 9099 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 558 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleவிமான பயணத்தில் கொரோனா பரவுமா? – விளக்கம்
Next articleஇந்த 10 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்