சம்மரில் தலை முடியை முறையாக பராமரிக்க உதவும் அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக!
ஆண்,பெண் அனைவரும் தங்களை அழகாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.முகம் மட்டும் அல்ல தலை முடியையும் முறையாக பராமரிக்கும் பழக்கம் இருந்தால் மட்டுமே முழுமையான அழகை அடைய முடியும்.
ஆனால் என்னதான் தலை முடியை பராமரித்தாலும் ஒரு சிலருக்கு முடி உதிர்வு,முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கத் தான் செய்கிறது.இவை கோடை காலத்தில் தான் அதிகளவு ஏற்படுகிறது.
கோடை காலத்தில் முடிகளுக்கு கூடுதல் அக்கறை கொடுத்து பராமரித்து வந்தால் முடி உதிர்தல் நின்று ஆரோக்கியமான முறையில் முடி வளரத் தொடங்கும்.
கோடை காலத்தில் தலை முடி அதிக வறட்சியை சந்திக்கும்.எனவே தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பது நல்லது.இரவு நேரத்தில் தலைக்கு ஆயில் மசாஜ் செய்து விட்டு படுப்பதன் மூலம் உடல் சூட்டை குறைக்க முடியும்.இதனால் முடி உதிர்தல் பிரச்சனை முடிவு கிடைக்கும்.
தலைக்கு இராசயனம் கலந்த ஷாம்புகளை உபயோகிப்பதை விட சீகைக்காய்,அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது.இதனால் தலை சூடு குறைந்து முடி உதிர்தல் நிற்கும்.
தலைக்கு கற்றாழை ஜெல்,வெந்தய பேஸ்ட்,சின்ன வெங்காய பேஸ்ட்டை பயன்படுத்துவதன் மூலம் உடல் சூட்டை குறைக்க முடியும்.இதனால் முடி உதிர்தல்,முடி வெடிப்பு பிரச்சனை சரியாகும்.
செம்பருத்தி பூ,கறிவேப்பிலை,செம்பருத்தி இலை,வேப்பிலையை அரைத்து ஹேர் பேக் போல் தலைக்கு பயன்படுத்தி வர முடி உதிர்தல் நிற்கும்.உடல் சூடு முழுமையாக தணியும்.
தயிரை அரைத்து தலைக்கு பயன்படுத்தி குளிப்பதன் மூலம் உடல் சூடு தணியும்.இதனால் முடி உதிர்தல்,பொடுகு,அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.