வெளியில் சென்று வந்தால் உங்கள் முகம் கருப்பாகி விடுகிறதா? இதை தடவினால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!
வாட்டி எடுக்கும் வெயிலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.வெளியில் செல்லவே முடியாத அளவு வெயிலின் தாக்கம் இருக்கின்றது.இந்த வெயிலால் உடல் மற்றும் சரும ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கிறது.
கோடையில் சருமத்தில் வறட்சி,கரும் புள்ளிகள்,வியர்க்குரு,சூட்டு கொப்பளம்,முகக் கருமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அவை மேனி அழகை கெடுக்கும் விதமாக இருக்கும்.இதை சரி செய்ய இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை ஜெல்
2)மஞ்சள் தூள்
3)தயிர்
4)தேன்
செய்முறை:-
முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பிறகு அதில் இருக்கின்ற ஜெல்லை மட்டும் ஒரு கிண்ணத்தில் போடவும்.
இதை நன்கு கலக்கவும்.ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலக்க வேண்டும்.இல்லையென்றால் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கவும்.
இந்த கற்றாழை பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்து விடவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள்,1/2 தேக்கரண்டி தயிர் மற்றும் 1/4 தேக்கரண்டி கலப்படம் இல்லாத தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இவ்வாறு செய்தால் பேஸ் பேக் தயாராகி விடும்.இதை காலை மற்றும் இரவு என்று இருவேளையும் முகத்திற்கு அப்ளை செய்து குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவாக காணத் தொடங்கும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)பீட்ரூட்
2)தேன்
செய்முறை:-
பீட்ரூட்டை இரண்டாக நறுக்கி அதன் பாதியை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.
இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து கலக்கவும்.இதை முகத்திற்கு பூசி 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்து வந்தால் நாளடைவில் வெள்ளையாக மாறத் தொடங்கும்.