ஊரடங்கு – ரிஸ்க் எடுக்கும் தெலுங்கானா! மக்கள் அதிருப்தி

0
121

தெலுங்கானா முதலமைச்சர் கொரோனா தொற்று‌ அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு மேலும் ‌ஜுன் மாதம் வரை நீட்டிக்கப்போவதாக அறிவிக்கப்படவிருந்த நிலையில் ஊரடங்கு விலக்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டது.

தெலுங்கானாவில் கடந்த மாதம் கொரோனோ தொற்று பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும், அரசின் பொருளாதாராம் பின்னடைந்த நிலையிலும் மக்களின் உடல்நல ஆரோக்கியம் மட்டுமே முக்கியம் என அரசு அறிவித்தது

இந்நிலையில் தெலுங்கானாவில் தீடீர் ஊரடங்கு விலக்கு மக்களை குழப்பத்திற்குள்ளாக்கியது. இது குறித்து தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்த தகவல் ஒன்றில் இன்று முதல் அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாக கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் அலுவலகங்கள், கடைகள்,தொழிற்சாலைகள் மூடியுள்ள நிலையில் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் ‌என்ன நிலை மாறப்போகிறது என இந்த ஊரடங்கு விலக்கினை “இருக்கு ஆனா இல்லை” என்கிற வசனத்தைப்போல் கேலியாக விமர்சித்து வருகின்றனர்.

Previous articleசென்னையில் உச்சமடையும் கொரோனா நோய் தொற்று – எந்த பகுதியில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?
Next articleவிரைவில் மெட்ரோ ரயில் சேவை – புதிய விதிமுறைகள் அறிவிப்பு