12ம் வகுப்பு பொதுத் தேர்வு – போனஸ் மதிப்பெண்கள் அறிவித்த தேர்வுகள் இயக்கம்

0
126

கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்புக்கான பொது தேர்வு நடைபெற்றது. தேர்வு நிறைவடைந்த சில நாட்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் விடைத் தாள் திருத்தும் பணி எப்போது தொடங்கும் என்ற நிலை நீடித்தது. ஒரு வழியாக கடந்த சில நாட்களுக்கு முன் விடைத் தாள் திருத்தும் பணியை அரசு தேர்வுகள் இயக்கம் துவங்கியது.

அதிக அளவிலான கொரோனா பாதிப்பு இருக்கும் சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த விடைத் தாள் திருத்தும் மையங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 12ம் வகுப்பு வேதியியல் தேர்வில் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

தேர்வு வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும். மாணவர்கள் கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 3 மதிப்பெண்கள் உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசென்னையில் இரண்டு நாட்களில் 12 பேர் கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சியில் மக்கள்
Next articleதொடரும் நூதன கொலைகள் – அதிர்ச்சியில் மக்கள்