டி20 தொடரில் விராட் கோஹ்லியை ஓபனிங் இறக்கிவிட வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பேச்சு!! 

Photo of author

By Sakthi

டி20 தொடரில் விராட் கோஹ்லியை ஓபனிங் இறக்கிவிட வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பேச்சு!!
வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விராட் கோஹ்லி அவர்களை களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டி20 உலகக் கேப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடக்கின்றது. 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஏ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளது.
இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியுடன் ஜூன் 5ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இது பல பிரச்சனைகளை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா அவர்கள் டி20 தொடரில் விராட் கோஹ்லி அவர்களை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அஜய் ஜடேஜா அவர்கள் “எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோஹ்லி அவர்களை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் மூன்றாவது பேட்ஸ்மேனாக இறங்க வேண்டும்.
விராட் கோஹ்லி அவர்கள் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் பவர் பிளேயில் விளையாடுவார். இதனால் விராட் கோஹ்லி அவர்களால் நீண்ட நேரம் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும்.
அதே போல ரோஹித் சர்மா அவர்கள் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும். ரோஹித் சர்மா அவர்கள் மூன்றாவதாக களமிறிங்கினால் ஆட்டத்தின் போக்கை அவரால் புரிந்து கொள்ள முடியும்” என்று அவர் கூறினார்.
உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா அவர்களும் விராட் கோஹ்லி அவர்களும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்கள் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்திய அணியில் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அவர்கள் இருக்கிறார். ஜெய்ஸ்வால் இருக்கும் பட்சத்தில் விராட் கோஹ்லி ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோஹ்லி அவர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.