புதிதாக மண் பானை வாங்கினால் இதை செய்யாமல் அதில் தண்ணீர் ஊற்றி அருந்தக் கூடாது!!
நம் முன்னோர்கள் காலத்தில் தண்ணீரை பானையில் ஊற்றி அருந்தும் பழக்கம் இருந்தது.இதனால் உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு ஆரோக்யமாகவும் இருந்தது.உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை மண் பானை நீர் அளித்தது.
அதேபோல் சமையல் செய்வதற்கு மண் பாத்திரங்களை விட பெஸ்ட் சாய்ஸ் இருக்க முடியாது.வெயில் காலத்தில் மண் பானையில் நீர் ஊற்றி அறுந்தி வந்தால் உடல் உஷ்ணம் நீங்கும்.ஆனால் இன்று பெரும்பாலானோர் வீடுகளில் குளிர்சாதனப்பெட்டியின் பயன்பாடு அதிகரித்து விட்டது.
ஆனால் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட நீரை அருந்தி வந்தால் அவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒன்றாக மாறி விடும்.எனவே மண் பானை நீர் அருந்துவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.
ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு மண் பானையை எவ்வாறு சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவது என்று தெரியவில்லை.
பானை வாங்கி வந்தவுடன் முதலில் அதில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊற விடவும்.மறுநாள் பானையில் உள்ள நீரை ஊற்றி விட்டு ஒரு பாத்திரத்தில் அரிசி ஊறவைத்த நீர் ஊற்றி அதில் மண் பானையை போட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின்னர் மண் பானையை நிழலில் காய வைக்கவும்.பானை நன்றாக காய்ந்து வந்த பின்னர் பானை முழுவதும் நீர் நிரப்பி ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.பிறகு இந்த நீரை ஊற்றி விட்டு மீண்டும் சாதாரண நீர் ஊற்றி ஒரு நாள் ஊற விடவும்.
இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் செய்த பின்னர் நிழலான இடத்தில் மண் பானையை வைத்து நன்கு உலர்த்தவும்.ஈரம் இல்லாத அளவிற்கு காய்ந்த பின்னர் சுத்தமான நீர் ஊற்றவும்.வீட்டில் பானை வைப்பதற்கு முன்னர் மணல் கொட்டி பிறகு வைக்கவும்.இவ்வாறு செய்தால் பானை நீர் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்.
அதேபோல் பானை நீரில் வெட்டி வேர் அல்லது படிகாரம் செய்தால் அதிக குளிர்ச்சியாகவும்,சுத்தமாகவும் இருக்கும்.இந்த நீரை தினமும் குடிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சியாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும்.