கொரோனா அச்சுறுத்தல் – ஐந்து மாநிலத்தை சேர்ந்தவர்கள் கர்நாடாகாவுக்குள் நுழைய தடை

0
109

கொரோனா நோய் பரவல் தற்போது உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கர்நாடாக மாநிலத்தில் தற்போது 2418 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். வரும் 31ம் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. அப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து கொரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கார்நாடாகாவிற்க்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட எந்த போக்குவரத்தின் வாயிலாகவும் கரநாடாகாவிற்க்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Previous articleஆன்லைன் நீட் பயிற்சி அறிவிப்பு – பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் லிங்க் உள்ளே
Next articleஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு