+1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு!! 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தல்!!

0
229
Is the incentive of Rs.25,000/- given to the students who have passed the 10th and 12th general examination?
Is the incentive of Rs.25,000/- given to the students who have passed the 10th and 12th general examination?

+1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு!! 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தல்!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 04 ஆம் தேதி +1 வகுப்பிற்கான பப்ளிக் எக்ஸாம் தொடங்கி ஏப்ரல் 25 வரை நடைபெற்றது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக நிறைதவடைந்து மே 14 ஆன இன்று காலை 9:30 மணியளவில் பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் இன்று வெளியிட்டது.பொதுத்தேர்வு முடிவுகளை https://tnresults.nic.in,https://dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் SMS மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் நிலவரம்:

தமிழகம் முழுவதும் 3,84,351 மாணவர்கள் மற்றும் 4,26,821 மாணவிகள் என்று மொத்தம் 8,11,172 பேர் தேர்வெழுதியிருந்தனர்.இதில் 7,39,539 பேர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.26% மற்றும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.69% ஆகும்.மாணவர்களை காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 7.43% அதிகமாகும்.

2022-2023 ஆம் கல்வியாண்டை ஒப்பிடுகையில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஆண்டு மாணவ,மாணவியரின் 0.24% உயர்ந்து 91.17% ஆக இருக்கிறது.

பட வாரியாக 100% தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை:

1.கணிதம் – 779

2.தாவரவியல் – 02

3.விலங்கியல் – 29

4.கணினி அறிவியல் – 3,432

5.வணிகவியல் – 620

6.தமிழ் – 08

7.பொருளியல் – 741

8.கணினி பயன்பாடுகள் – 288

9.வணிக கணிதம்,புள்ளியில் – 293

10.ஆங்கிலம் – 13

11.வேதியல் – 696

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்:

அரசுப் பள்ளிகள் – 85.75%

அரசு உதவிப்பெறும் பள்ளிகள் – 92.36%

தனியார் சுயநிதி பள்ளிகள் – 98.09%

இருபாலர் பள்ளிகள் – 91.61%

பெண்கள் பள்ளிகள் – 94.46%

மாவட்டங்களை பொறுத்தமட்டில் கோவை மாவட்டம் 96.02% தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்திலும் 95.56% மற்றும் 95.23% தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு,திருப்பூர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது.அதேபோல் 241 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Previous articleParle-G: ஓஹோ இந்த ட்ரிக் தானா? 27 வருடங்களை கடந்தும் ரூ.5 க்கு விற்பனை..!
Next articleTNPSC Group 4: இந்த தேதியில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு!!