ஒரே டிக்கெட் இருந்தால் போதும் பஸ் மெட்ரோ மின்சார ரயிலில் ஈசியாக பயணம்!! வருகிறது புதிய முறை மக்கள் ஆர்வம்!!

ஒரே டிக்கெட் இருந்தால் போதும் பஸ் மெட்ரோ மின்சார ரயிலில் ஈசியாக பயணம்!! வருகிறது புதிய முறை மக்கள் ஆர்வம்!!

மக்கள் சென்னையிலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ, மின்சார ரயில் அல்லது பேருந்து வழியாக பயணம் செய்து வருகின்றனர். இம்முறையில் பயணம் செய்வதற்கு மக்கள் ஒவ்வொரு முறையும் தனித்தனியாக பயணசீட்டு வாங்க வேண்டும். இதனால் சில நேரங்களில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு கால தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நேர விரையத்தை குறைக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழு மூலமாக மெட்ரோ,மின்சார ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு ஒரே டிக்கெட் முறையை அறிமுகம் செய்வதற்கு திட்டம் தீட்டி அது தற்பொழுது நடைமுறைக்கு வர உள்ளது.

தற்பொழுது வரை அரசு பேருந்துகளில் மக்கள் நேரடியாக பயணசீட்டு பெற்றுக்கொண்டு பயணம் செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்ய யூடிஎஸ் செயலி முறையிலும் அல்லது நேரடியாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மேலும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதற்கு நேரடியாக மற்றும் பயண அட்டை, செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம். இம்முறையில் மாற்றத்தை கொண்டுவர தான் ஒரே டிக்கெட் முறையை செயல்படுத்த அரசு முடிவு எடுத்து இம்முறையானது வருகின்ற ஜூன் இராண்டம் வாரத்தில் செயல் முறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மக்கள் கியூஆர் கோடு முறையை பயன்படுத்தி எல்லா போக்குவரத்துகளிலும் ஒரே கார்டில் பயணம் செய்யலாம்.

இதற்க்கு பாஸ் அல்லது கார்டு போன்ற அட்டை கொடுக்கப்படும். இதன் மூலம் ஒரே கார்டை பயன்படுத்தி மெட்ரோவில் பயணம் செய்ய ஸ்கேன் செய்தால் போதும். அதுபோல மின்சார ரயில்களிலும் கார்டை செக்கர்களிடம் ஸ்கேன் செய்து கொள்ளலாம். இதே போல பேருந்துகளிலும் ஸ்கேன் முறையை பயன்படுத்தி பயணம் செய்து கொள்ளலாம்.

இதற்கு புதியதாக உருவாக்கப்பட்ட செயலியில் புறப்பட இருக்க இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும் மேலும் எத்தனை முறை பயணம் செய்ய போகிறீர்கள் எத்தனை போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய போகீறீர்கள் என்பதையும் பதிவு செய்தால் போதும்.உங்களுக்கான பயணம் செய்ய போகும் மொத்த தொகையும் எவ்வளவு என்பதை தெரிந்து அதற்க்கான தொகையை செலுத்தி டிக்கெட் பெறலாம் என்பதை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதை ரீ சார்ஜ் செய்து ஒரே கார்டில் மூன்று சேவைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் டிக்கெட் வாங்குவதற்குஆகும் கால தாமதம் ஏற்படாது. இதனால் கால் கடுக்க கவுன்ட்டர்களில் நிற்க ஆகும் நேரம் குறையும்.