இனி வாட்சாப் மூலம் சமயல் சிலிண்டர் புக் செய்யலாம் – வழிமுறை என்ன தெரியுமா?

0
132

மக்களுக்கு எளிதாக் சேவை செய்யும் வகையில் எண்ணை நிறுவனங்கள் பல வசதிகளை செய்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன், IVR உட்பட பல்வேறு வழிகளில் மக்கள் சமயல் சிலிண்டர்கள் முன் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையின் மூலம் இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணிலிருந்து இந்த சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலிண்டர் வினியோகம் செய்தவுடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதா? சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என்று வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்பும். அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்றி இண்டேன் வாடிக்கையாளர்கள் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்

  • கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து கேஸ் பதிவு செய்யு, REFILL என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பிற்கு வந்துவிடும்.
  • கேஸ் இணைப்பில் பதிவு செய்யப் படாத அலைபேசி எண்ணிலிருந்து பதிவு செய்யம், REFILL#<உங்கள் 16 இலக்க LPG ID> என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பிற்க்கு வந்துவிடும்.
  • உங்கள் கேஸ் பதிவின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ள
    STATUS#<உங்கள் புக்கிங் Order நம்பர்> என டைப் செய்து அனுப்பினால் உடனே உங்கள் பதிவின் தற்போதைய நிலை குறித்த தகவல் உங்கள் வாட்ஸப்பிற்க்கு வந்துவிடும்.
Previous articleகிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தி – ஆஸ்திரேலியா இந்தியா தொடர் அட்டவணை வெளியீடு
Next articleதி நகர் ரங்கநாதன் தெருவில் அதிரடியாக அனைத்து கடைகளையும் மூடிய மாநகராட்சி