இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!! 50+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள “TECHNOLOGY EXECUTIVES” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் மே 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை: மத்திய அரசு பணி
நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை
பணி:
*TECHNOLOGY EXECUTIVES
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 54
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதனோடு பணி சார்ந்த துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
*நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்த பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
இப்பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 25.05.2024
கூடுதல் விவரங்கள் அறிய https://www.ippbonline.com/documents/31498/132994/1714734271280.pdf என்ற இணையதள பக்கத்தை அணுகவும்