Bad breath in Tamil: வாய் துர்நாற்றம் (bad breath in mouth ) வீசுவதால் மற்றவரிடம் பேசுவதற்கு கூட தயங்குகிறீர்களா? அதனை எளிமையாக நமது வீட்டு வைத்தியத்தின் மூலம் சரி செய்து விடலாம். சிலர் யோசனை செய்வது உண்டு நாம் முறையாக பல் துலக்கினாலும் ஏன் இந்த வாய் துர்நாற்றம் வீசுகிறது என்று புலம்புவார்கள்.
வாய் துர்நாற்றத்தினால் நாம் மிகுந்த சிரமத்துடன் மற்றவர்களிடம் பேசுகிறோம். சிலருக்கு வாய் துர்நாற்றம் வீசுமோ என்ற சந்தேகத்தினால் கூட மற்றவரிடம் பேசுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.
நாம் இந்த பதிவில் வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? எளிமையான முறையில் வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வழிமுறைகளை என்ன என்பதை தற்போது (How to Cure Bad Breath Fast in Tamil) பார்க்கலாம்.
வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?
ஒரு சிலர் சாப்பிட்டுவிட்டு நன்றாக வாய் கொப்பளிக்காமல் இருந்தாலோ, பல் துலக்காமல் இருந்தாலோ சாப்பிட்ட உணவின் துகள்கள் பற்களில் படிந்து துர்நாற்றம் வீசும்.
வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்றுப்புண், பல் ஈறுகளில் புண், நாக்கில் வெள்ளையாக இருத்தல், நுரையீரலில் நீண்ட நாட்களாக சளி இருத்தல், பற்களில் சொத்தை உருவாகி சீல் பிடித்தல், தொண்டைப் புண் போன்ற காரணங்களால் வாயில் துர்நாற்றம் வீசும்.
புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். மற்ற புகையிலை பயன்படுத்தினாலும் வாயில் துர்நாற்றம் (How to Cure Bad Breath Fast in Tamil) ஏற்படும்.
குணப்படுத்துவது எப்படி?
காலை எழுந்ததும் எவ்வாறு பல் துலக்குகின்றோமோ அதுபோல இரவு சாப்பிட்டு முடித்த பின் சிறிது நேரம் கழித்து பல் துலக்கி விட்டு உறங்க வேண்டும். இல்லையென்றால் பற்களில் உணவு துகள்கள் சேர்ந்து துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும்.
கொதிக்க வைத்த தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து தினம்தோறும் வாய் கொப்பளித்து வர வாயில் ஏற்படும் துர்நாற்றம் மறையும்.
உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் சிறிது, சிறிதாக குறைந்து விடும்.
வாயில் இரண்டு கிராம்பு போட்டு மென்று வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் மறையும்.
பற்களை எவ்வாறு துலக்குகிறோமோ அதுபோல நாக்கை சுத்தம் செய்வது அவசியம்.
பற்களில் மாட்டிக்கொள்ளும் உணவுகளான அசைவங்களை சாப்பிட்டு முடித்த பின் பற்களில் உணவு துகள்கள் தங்கி உள்ளதா என்று பார்த்து வாயை நன்றாக கொப்பளித்து விட வேண்டும்.
சாப்பிட்டு முடித்தவுடன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட்டு வர வாய் துர்நாற்றத்தை குறைக்கலாம்.
நமது தாத்தா, பாட்டி வெற்றி போடுவார்கள். அதனால் அவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படாது. வெற்றிலையை மென்று தின்று வர வாய் துர்நாற்றம் ஏற்படாது. (புகையிலை தவிர்த்து).
ஏலக்காய் வாயில் போட்டு மென்று வர வாய் துர்நாற்றம் ஏற்படாது.
சுவிங்கம் மென்று தின்று வர உமிழ் நீர் சுரந்து வாயில் துர்நாற்றம் வீசாது. மற்றவர்களிடம் பேச சிரமப்படுபவர்கள் இதனை கடைப்பிடிக்கலாம். இருந்த போதும் சர்க்கரை இல்லாத சுவிங்கம் சிறந்தது.
தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும். வாய் வறண்டு போகாமல் இருக்க வேண்டும். வாய் வறட்சி துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
கொதிக்கும் நீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொப்பளிக்க வேண்டும்.
முட்டை, அசைவம் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும்.
காலை பல் துலக்கிவிட்டு துளசி இலைகளை மென்று தின்றுவர வாய் துர்நாற்றம் மறையும்.
மேலும் படிக்க: Kollu Benefits in tamil: கொழுப்பை குறைக்கும் கொள்ளு..! யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது?