Home Vastu Tips in Tamil: ஒரு சிலர் வேலைக்கு சென்று மாதம் மாதம் சம்பளம் வாங்கினாலும் அல்லது தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் ஓரளவிற்கு வருமானம் வந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றும், சம்பாதிக்கும் பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற கவலை இருந்துக்கொண்டே இருக்கும். அதற்கு காரணமும் தெரியாமல் நாம் அடிக்கடி புலம்புவதும் வழக்கம் தான்.
இதனை ஆன்மீக ரீதியாக பார்த்தால் நம் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களால் நமக்கு எதிர்மறையான செயல்கள் நடக்கும். ஆனால் இது தெரியாமல் நாம் காரணத்தை தேடிக்கொண்டிருப்போம். ஒரு சிலருக்கு இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கும். அதன்படி வீடு கட்டும் போது வாஸ்து பார்த்து கட்டுவதும் இதில் அடங்கும். அவ்வாறு இருக்கும் போது நம் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்களினால் நமக்கு கஷ்டங்கள் வந்துக்கொண்டிருக்கும். இது போன்ற பாெருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதனை தூக்கு எறிந்துவிடுங்கள்.
வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் பொருட்கள்
முதலில் நம்முடைய தோற்றம், எண்ணங்கள் அனைத்தையும் பிரதிபலிப்பதாக விளங்குவது கண்ணாடி. ஏனென்றால் கண்ணாடிக்கு ஆற்றலை ஈர்க்கும் சக்தி உள்ளது. அதனால் தான் ஒரு சிலர் வீட்டிற்கு முன் கதவுக்கு எதிரே வைத்து கண்ணாடி வைத்திருப்பார்கள். இந்நிலையில் தான் கண்ணாடி உடைந்த நிலையில் இருந்தால் வீட்டிற்கு நல்லது அல்ல.
கடிகாரம் உடைந்த நிலையில் இருந்தால் அது வீட்டிற்கு அது நல்லது அல்லது. கடிகாரம் ஓடாமல் இருந்தாலும் அது எதிர்மறையான ஆற்றலை வெளிப்படுத்தும்.
உடைந்த அல்லது பழுதடைந்த கடவுள் திருவுறுப்படங்கள், சிலைகள். இவைகள் நிச்சயம் வீட்டிற்கு கெடுதலை கொடுக்கும். நாம் பூஜை அறையில் வைத்து வணங்கக்கூடிய கடவுளின் படங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும்.
பூஜை அறையில் கடவுளின் படங்களுக்கு பூக்கள் வைப்பது வழக்கம். அந்த பூக்கள் காய்ந்துவிட்டால் உடனடியாக அகற்ற வேண்டும். நீண்ட நாட்கள் வைத்திருக்க கூடாது.
மேலும் படிக்க: Vaikasi Visakam 2024: வைகாசி விசாகத்தில் முருகப்பெருமானை வழிபட சிறந்த நேரம் எது..!