Vaikasi Visakam 2024: வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த நாளாகும். நமது ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் முக்கியமானதாக கருதப்பட்டாலும், அவற்றில் கிருத்திகை மற்றும் விசாக நட்சத்திரம் முருக பெருமானுக்குரிய முக்கிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. சிவபெருமானின் திருவிளையாட்டால் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றி ஆறு தாமரை மலர்களில் தவழ்ந்த ஆறு குழந்தைகளை வளர்த்தெடுத்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக சிவபெருமான் அவர்களுக்கு வரத்தால் அருளிய முக்கியமான விரதம் நாள் தான் இந்த கிருத்திகை நட்சத்திரம். இந்த கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உரிய விரத (Vaikasi Visakam viratham irupathu eppadi) நாளாகும்.
முருகப்பெருமானுக்குரிய முக்கியமான நாட்களில் ஒன்றாக இந்த வைகாசி விசாகம் பார்க்கப்படுகிறது. மேலும் விசாக நட்சத்திரம் என்பது அறிவு சார்ந்த அதாவது ஞானத்திற்கு உரிய நட்சத்திரமாகும். அதனால் விசாக நட்சத்திரத்தில் தோன்றிய முருக பெருமான் தனது தந்தையான சிவபெருமானுக்கே வேதத்தின் பொருள் உரைத்தவன் என்பதால் முருகப்பெருமானை ஞான பண்டிதன் என்றும் அழைப்பதுண்டு.
மேலும் வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமியையும் விசாகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை வைகாசி விசாகம் என கூறுகிறோம். வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானுக்கு உகந்த நாள் என்பதால் அனைத்து முருகன் கோவில்களிலும் பூஜைகள் அபிஷேகங்கள் மற்றும் காவடி எடுத்தல் மற்றும் ஆறுபடைகளில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். இதனை காண்பதற்கு பல ஊர்களில் இருந்தும் முருகன் பக்தர்கள் முருகன் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி முருகனை வழிபட்டு வருவார்கள்.
விரதம் – Vaikasi Visakam viratham
இந்த வைகாசி விசாகத்திற்கு அன்று முருக பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள் அன்று அதிகாலை எழுந்து தலை குளித்துவிட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வைத்து வணங்கலாம். அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் அபிஷேகத்திற்கு தேவையான பால், மலர்கள் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்.
அன்று விரதம் இருப்பவர்கள் நீர் ஆராரோ ஆகாரம் உண்டு விரதத்தை தொடங்கலாம். பிறகு வீட்டில் மாலையில் ஆறு மணி விளக்கு ஏற்றுவது, முருகப்பெருமானுக்கு விருப்பமான கந்தர்ப்பம் எனப்படும் இனிப்பு அப்பத்தை வைத்து வழிபடலாம். அல்லது வேறு ஏதாவது இனிப்பு பலகாரங்கள் செய்து அதனை முருகப்பெருமானுக்கு வைத்து வழிபடலாம்.
பலன்கள்
வைகாசி விசாகம் அன்று முருக பெருமானின் வழிபடுவதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் தீர்ந்து முருகப்பெருமானின் முழு ஆசியும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
வைகாசி விசாகம் 2024 எப்போது?
இந்தாண்டு 2024 மே 22ம் புதன்கிழமை வருகிறது. மேலும் இது மே 22ம் காலை 08.18 மணி முதல், மறுநாள் மே 23ம் தேதி காலை 09.43 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலின் பெருமை!