வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு!
கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று(மே24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் இது புயலாக மாறி வங்கதேசத்தை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடககழக்கு திசையை நோக்கி நகர்ந்தது. வடகிழக்கு திசையில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்ககடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று(மே24) மத்திய வங்கக் கடல்பகுதிகளுக்கு சென்றுள்ளது. அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் அதே திசையில் நகரக்கூடும். அதே திசையில் நகர்ந்து நாளை(மே25) புயலாக மாறக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு ஓமன் நாடு ‘ரெமல்’ என்று பெயர் வைத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வங்கதேசத்தை கடக்கும் பொழுது புயலாகத் தான் கடக்கும்” என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கடை மழை பெய்து வரும் நிலையில் தற்பொழுது உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பொழுது தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழகத்தில் ஏற்கனவே மழை பெய்தது குறையத் தொடங்கியுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பொழுது தமிழகத்தில் மழை முற்றிலுமாக குறையும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இன்று(மே24) மதியம் 1 மணி வரை நீலகிரி, கோவை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், கேரளாவில் அதிக கனமழைக்கும் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொச்சி போன்ற ஒரு சில நகரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.