என்னுடைய பயம் தான் என் வெற்றிக்கு முதல் காரணம்! மகேந்திர சிங் தோனி பேட்டி!

0
137
I prefer Instagram M S Dhoni

என்னுடைய பயம் தான் என் வெற்றிக்கு முதல் காரணம்! மகேந்திர சிங் தோனி பேட்டி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி அவர்கள் அளித்த பேட்டியில் “எனக்குள் இருக்கும் என்னுடைய பயம் தான் என்னுடைய வெற்றிக்கு முதல் காரணம்” என்று கூறியுள்ளார்.

17வது ஐபிஏல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பத்து அணிகள் பங்கேற்ற ஐபிஏல் தொடரில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற குவாலிபையர் 1 சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றது.

அதே போல அடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை வீழ்த்தி குவாலிபையர் 2 சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்து நடக்கவுள்ள குவாலிபையர் 2 சுற்றில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. குவாலிபையர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் பெட்டிக்கு தகுதி பெறும்.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வெற்றி 7 தோல்விகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி அவர்கள் பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியின் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தோனி “பயம் என்பது வாழ்க்கையில் அனைவருக்கும் முக்கியமான ஒன்று. அந்த பயம் உங்களுக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் இருக்க வேண்டும். எனக்கு பயம் இல்லையென்றால் நான் எப்பொழுதும் தைரியமாக இருக்க முடியாது.

என்னை பொறுத்தவரை பயமும் அழுத்தமும் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஏன் என்றால் இந்த பயமும் அழுத்தமும் தான் என்னை என்னுடைய வாழ்க்கையில் சரியான முடிவை எடுக்க உதவி செய்கின்றது.

என்னை பயம் இல்லாதவன் என்று எல்லாரும் நினைக்கிறீர்கள். பலரும் என்னிடம் சொல்கிறார்கள். ஆனால் நான் நீங்கள் நினைக்கும்படி இல்லை. ஒருவருக்கு பயமில்லை என்றால் அவர் நிச்சியமாக வாழ்க்கையில் பொறுப்பில்லாத நபராகத் தான் இருக்க வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் கூறும்படி எனக்கு பயமில்லை என்றால் நான். சாதாரணமான விஷயத்தை கூட மதிக்காமல் இருந்திருப்பேன். அவ்வாறு பயம் இல்லாமல் இருக்கும் அணுகுமுறை வந்து நீங்கள் எப்பொழுது சாலையில் நடந்து செல்கிறீர்கள், எப்பொழுது கயிற்றில் நடந்து செல்கிறீர்கள் என்பதை உங்களுக்கு தெரியாமல் செய்துவிடும். அதனால் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையின் வெற்றிக்கு பயமும் அழுத்தமும் மிகவும் அவசியமான தேவையான ஒன்று என்பதை நான் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.