புதிய ரேசன் கார்டுக்கு அப்ளை செய்தவர்கள் கவனத்திற்கு!! புதிய அப்டேட்டை வெளியிட்ட தமிழக அரசு!!
மத்திய,மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் பொது விநியோக திட்டத்தின் மூலம் அரிசி,கோதுமை இலவசமாகவும்,பருப்பு,எண்ணெய்,சர்க்கரை குறைவான விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 22,419,359 குடும்ப அட்டைகள் உள்ளனர்.தமிழக அரசானது பொதுமக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை,பொங்கல் பரிசு உள்ளிட்ட நலத்திட்டங்களை ரேசன் கடைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது.அது மட்டுமின்றி பிற நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கும்,ரேசனில் கிடைக்க கூடிய மலிவு விலை பொருட்களை பெறுவதற்கும் ரேசன் அட்டை முக்கியமாகும்.
இதனால் புதிதாக திருமணமானவர்கள்,ரேசன் கார்டு இல்லாதவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.தமிழக அரசிடம் இருந்து ரேசன் கார்டு பெற வேண்டும் என்றால் நீங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருப்பது அவசியம்.
வெளிமாநிலத்தவராக இருந்தால் குறைந்தது 6 மாதம் தமிழகத்தில் வசித்தால் ரேசன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யலாம்.புதிய ரேசன் அட்டைக்கு விண்ணப்பம் செய்ய ஆதார்,இருப்பிடச் சான்று,அடையாள சான்று,சிலிண்டர் பில் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
புதிதாக திருமணமானவராக இருந்தால் திருமண பத்திரிக்கை,தனி கேஸ் இணைப்பு கட்டாயமாகும்.தமிழகத்தில் 55 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தனி ரேசன் அட்டை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற மேலும் 2,44,000 பேர் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்க தொடங்கினர்.இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேசன் கார்டு வழங்குவதை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
புதிய ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு புதிய ரேசன் கார்டு வழங்கப்படும் என்று உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதன்படி ஜூன் 04 ஆம் தேதிக்கு பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.