Reusing Cooking Oil Side Effects: பொரித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துபவரா நீங்கள்? இது விலை கொடுத்து வாங்கும் ஆபத்து!
ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பழக்கம் இந்தியர்களிடம் உள்ளது.உணவகங்களில் இது போன்ற நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகிறது.பொரித்த எண்ணையில் சமைப்பது,மீண்டும் பொரிப்பது என்று எண்ணையின் நிறம் அடர் கருமையாகும் வரை அதை பயன்படுத்தி வரும் நம் மக்களுக்கு அதில் இருக்கின்ற ஆபத்துக்கள் தெரிவதில்லை.
சமையலுக்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தினால் அதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் அழிந்து அவை உடல் ஆரோக்கியத்தை முழுமையாக கெடுத்து விடும்.
உபயோகப்படுத்தபட்ட எண்ணையை மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்:
நீங்கள் பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்டால் செரிமான கோளாறு ஏற்படும்.
மீண்டும் மீண்டும் இந்த வகை எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்டு வந்தால் உடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.
உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் பயன்படுத்தப்பட்ட எண்ணையில் சமைத்த உணவுகளை சாப்பிடுவது தான்.
உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்கி மாரடைப்பு,உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு வழி வகுக்கும்.
சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் அவை தொண்டை எரிச்சல் பாதிப்பை உண்டு பண்ணும்.
பயன்படுத்தப்பட்ட எண்ணையில் மீண்டும் சமைத்து உண்டால் வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.வயிற்றுப்போக்கு,வயிறு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.